ஆப்நகரம்

மதுரை சாலைகளில் அதிமுக டோக்கன்களை வீசி எரிந்த மக்கள்!

மதுரை சோழவந்தான் தொகுதியில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு வீடு, வீடாக வழங்கிய டோக்கன்களை வீதியில் வீசிய பொதுமக்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Samayam Tamil 7 Apr 2021, 4:15 pm
மதுரை மாவட்டம் சோழவந்தான் தனி தொகுதியில் அதிமுக, திமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் என 5 முனை போட்டி நிலவுகிறது.
Samayam Tamil மதுரை சாலைகளில் அதிமுக டோக்கன்களை வீசி எரிந்த மக்கள்!


இதையடுத்து, சென்னை ஆர்கே நகரில் செய்தது போல் தேர்தலுக்கு முந்தைய நாள் அனைவருக்கும் பணம் வழங்க டோக்கன்களை வழங்கியுள்ளனர். இந்த சூழலில் டோக்கன்களை பெற்ற பொது மக்கள் அதை வாக்குச்சாவடிக்கு வெளியே கிழித்துத் தூக்கி வீசியிருந்தனர்.

இதனால் வாக்குச்சாவடி அமைந்திருந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் பறக்கும் படையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று டோக்கன்களை பறிமுதல் செய்தனர்.

ஆம்புலன்சில் வந்திறங்கி ஓட்டுப் போட்ட மதுரை பாட்டி!

இந்த டோக்கன்களை பூத் பகுதியில் வைத்து வாக்காளர்களுக்கு வழங்க வைத்திருந்தனரா என விசாரணை நடத்தி வருகின்றனர். இப்போதெல்லாம் தேர்தல் நேரத்தில் பணம் விநியோகம் என்பது சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது.

அடுத்த செய்தி