ஆப்நகரம்

டேக்வாண்டோவில் மதுரை பொறியாளர் அதிசய உலக சாதனை: மோடிக்கு சமர்ப்பித்தார்!

24ஆவது கின்னஸ் சாதனையைப் பிரதமர் மோடிக்கு அர்ப்பணிப்பதாகப் பெருமிதத்தோடு மதுரை இளைஞர் அறிவித்துள்ளார். கின்னஸ்தான் இவர் முழு நேரத் தொழிலாக மாறிப்போனது.

Samayam Tamil 25 Jul 2021, 8:03 pm
டேக்வாண்டோவில் 24ஆவது கின்னஸ் சாதனை. உலகில் முதன் முறையாக ஒரு நிமிடத்தில் 37கான்கிரீட் கற்களைக் கால்களால் உடைத்து கின்னஸ் சாதனை படைத்த மதுரை மென்பொருள் பொறியாளர்.
Samayam Tamil டேக்வாண்டோவில் மதுரை பொறியாளர் அதிசய உலக சாதனை: மோடிக்கு சமர்ப்பித்தார்!


தனது 24ஆவது கின்னஸ் சாதனையைப் பிரதமர் மோடிக்கு அர்ப்பணிப்பதாகப் பெருமிதம் தெரிவித்துள்ளார். மதுரை சின்னசொக்கிகுளம் பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் நாராயணன் டேக்வோண்டோ மீதான ஈடுபாட்டால் தனது 23 வயதிலிருந்து தொடர்ந்து டேக்வாண்டோ கற்கத் தொடங்கியதோடு டேக்வாண்டாவில் பல்வேறு கின்னஸ் சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்.

இதுவரையிலும் கடந்த சில ஆண்டுகளில் டேக்வாண்டோவில் பல்வேறு பிரிவுகளின் கீழ் இதுவரை 23 கின்னஸ் சாதனைகளை நிகழ்த்திய நாராயணன் இப்போது 24ஆவது கின்னஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

நாட்டுக்காக உயிரை விட்ட மதுரை ராணுவ வீரர் இறுதி நிமிடங்கள்!
இவர் இப்போது உலகின் முதன்முறையாக ஒரு நிமிடத்தில் 37கான்கிரீட் கற்களைத் தனது கால்களைப் பயன்படுத்தி உடைத்து சாதனை நிகழ்த்தியுள்ளார். இந்த சாதனையை கின்னஸ் சாதனை புத்தக நிறுவனம் தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

உலகிலேயே முதன்முறையாக இது போன்று கால்களால் கான்கிரீட் கற்களை உடைக்கும் முயற்சியை நாராயணன் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மென்பொருள் பொறியாளரான நாராயணன் தனது 24ஆவது கின்னஸ் சாதனையை இந்தியப் பிரதமர் மோடிக்கு அர்ப்பணிப்பதாகவும், முதன்முறையாக இந்த முயற்சியை மேற்கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தொடர்ச்சியாக டேக்வாண்டோ குறித்து பல்வேறு மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்து அவர்களையும் சாதனையாளராக உருவாக்குவேன் எனத் தெரிவித்தார்.

அடுத்த செய்தி