ஆப்நகரம்

இடம் மாறும் மத்திய சிறை; மதுரை மக்களுக்கு குட் நியூஸ்!

மதுரை மத்திய சிறைச்சாலை இடையப்பட்டி பகுதிக்கு மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 26 Apr 2022, 2:53 pm
மதுரை மத்திய சிறை 1865-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. 150 ஆண்டுகள் பழமையான இந்த சிறைச்சாலை தென் மாவட்டங்களில் மிக முக்கியான சிறைச்சாலையாக உள்ளது. தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகள் என சுமார் 1500 பேர் இங்கு அடைக்கப்பட்டுள்ளனர்.
Samayam Tamil Madurai Central Prison
மதுரை மத்திய சிறைச்சாலை


மதுரை நகர் பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஜெயிலை புறநகர் பகுதிக்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக போதிய வசதிகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் மதுரை புறநகர் பகுதிக்கு ஜெயிலை மாற்ற சிறை நிர்வாகம் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தது. அதனை ஏற்று, தற்போது மதுரை மாவட்டம் இடையப்பட்டி அருகே சுமார் 100 ஏக்கர் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாம்சங் கேலக்ஸி M32 வெல்ல அட்டகாசமான வாய்ப்பு. இந்த படிவத்தை பூர்த்தி செய்து பல கவர்ச்சிகரமான பரிசுகளை வெல்லுங்கள்

மதுரையில் புதிதாக கட்டப்படவுள்ள சிறைச்சாலை சென்னையில் உள்ள புழல் சிறைக்கு இணையாக பாதுகாப்பு வசதிகளும், விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள், பெண் சிறை, தொழிற்சாலைகள், நூலகங்கள், விவசாயம் செய்வதற்கான வசதிகள் உள்ளிட்டவைகள் ஏற்பாடு செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக் தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி