ஆப்நகரம்

பட்டாசு ஆலை வெடிவிபத்து... பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு

மணி மருந்து கலவையில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக வெடிவிபத்து வெள்ளிக்கிழமை ஏற்பட்டது. இதில் மூன்று அறைகள் முற்றிலும் சேதமடைந்தன.

Samayam Tamil 24 Oct 2020, 7:26 am
மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் எம்.செங்குளம் கிராமத்தில் ராஜலட்சுமி பட்டாசு ஆலை உள்ளது. சிவகாசியை சேர்ந்த சண்முகராஜன் என்பவருக்கு சொந்தமான இந்த பட்டாசு ஆலையை ஆமத்தூரை சேர்ந்த அழகர்சாமி என்பவர் குத்தகைக்கு எடுத்து பட்டாசுகள் தயாரித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
Samayam Tamil firework accident


இந்நிலையில் பேன்ஸி ரக வெடிகள் தயாரிப்பின் போது மணி மருந்து கலவையில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக வெடிவிபத்து வெள்ளிக்கிழமை ஏற்பட்டது. இதில் மூன்று அறைகள் முற்றிலும் சேதமடைந்தன. அப்போது அங்கு பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 3 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்துத் தகவலறிந்த விருதுநகர் தீயணைப்புத்துறையினர் பட்டாசு ஆலையில் மேலும் தீ பரவாமல் அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

நெல்லை: கோயில் நிலத்துக்குப் பட்டாவா? இந்து அமைப்புகள் போராட்டம்

மேலும் படுகாயமடைந்த மூன்று பேர் விருதுநகர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில், பலி எண்ணிக்கை தற்போது 7ஆக உயர்ந்துள்ளது
இதுகுறித்து கல்லுப்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி