ஆப்நகரம்

Bus Strike: ஈ ஓட்டும் மதுரை பேருந்து நிலையங்கள்

மதுரையில் போக்குவரத்து சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கிய நிலையில் வெறிச்சோடிய பேருந்துநிலையங்கள்

Samayam Tamil 25 Feb 2021, 2:35 pm
ஊதிய உயர்வு, நிலுவை தொகை. உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து சங்கங்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் இன்று காலை முதல் வேலைநிறுத்தம் தொடங்கியது.
Samayam Tamil madurai-bus


மதுரை மாநகர் போக்குவரத்து பணிமனைகளான பொன்மேனி, பைபாஸ் எல்லிஸ்நகர், புதூர், கே.கே.நகர், மற்றும் புறநகர் பகுதிகளாக திருப்பரங்குன்றம், செக்கானூரணி, உசிலம்பட்டி ஆகிய பணிமனைகளில் இருந்து இன்று காலை முதலாகவே பேருந்துகள் இயக்கப்படாத நிலையில் போக்குவரத்து முடங்கியது.

மதுரை கோட்டத்தில் உள்ள 1400பேருந்துகளில் 5சதவித பேருந்துகள் மட்டுமே தற்காலிக ஓட்டுனர்களை கொண்டு இயக்கப்பட்டுவருகிறது. போக்குவரத்து பணியாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக பொது போக்குவரத்து முடங்கியதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். மதுரையிலிருந்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு செல்லகூடிய பேருந்துகளும் இயக்கப்படவில்லை.

பன்முகத்தன்மை கொண்ட புதுச்சேரி... மீண்டும் திருக்குறள் பயன்படுத்திய பிரதமர்

இதுவரை 60 அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால் பொதுமக்கள் தனியார் பேருந்துகளில் பயணிக்க அவதிப்பட்டு வருகின்றனர்.

அனைத்து அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த செய்தி