ஆப்நகரம்

மதுரையில் போக்குவரத்து ஊழியர்கள் நூதன போராட்டம்!

மதுரையில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்தினார்கள் சாதாரண உடைகள் அணிந்து பேருந்துகளை இயக்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்

Authored bySM Prabu | Samayam Tamil 1 Dec 2022, 1:39 pm
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு சீருடை வழங்க வலியுறுத்தி மதுரையில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனார்கள் சாதாரண உடைகள் அணிந்து பேருந்துகளை இயக்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Samayam Tamil போக்குவரத்து ஊழியர்கள்
போக்குவரத்து ஊழியர்கள்


சீருடைகள் வழங்க வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், சீருடை அணியாமல் சாதாரண உடையில் பேருந்துகளை இயக்கி மதுரையில் அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனார்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரையில் உள்ள 16 பணிமனைகளில் போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகள் சீருடை வழங்கவில்லை. தொழிற்சங்கங்கள் மற்றும் போக்குவரத்து கழக நிர்வாக ஒப்பந்தத்தின்படி ஆண்டுக்கு 2 செட் சீருடைகள் எப்ரல் மாதத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும். 2016 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 4 செட் சீருடைகள் வழங்குவதாக அறிவித்தார்.

தமிழ்நாடு முழுவதும் 100 பொதுக்கூட்டங்கள்: திமுக தீர்மானம்!
இந்நிலையில் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சீருடை வழங்கப்படவில்லை. நீண்ட போராட்டங்களுக்கு பின் 2019 ஆம் ஆண்டு 1 செட் சீருடை மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால், 2020 முதல் 2022 தற்போது வரை போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சீருடை வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து சீருடை அணியாமல் சாதாரண உடையில் பேருந்துகளை இயக்கி மதுரையில் அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனார்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரையில் ஓட்டுநர், நடத்துனர் மற்றும் அலுவலர்கள் அதிகாரிகள் என 5,500 பணியாற்றி வருகிறார்கள். இதில் 700 பேர் சீருடை அணியாத பணியாளர்கள் மற்ற அனைவரும் சீருடை பணியாளர்கள் ஆவர். மதுரையில் உள்ள 700 அரசு பேருந்துகளை ஓட்டுநர், நடத்துனர் 2800 பேர் 2 ஷிப்டுகளாக பேருந்துகளை இயக்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
SM Prabu
நான் மணிகண்ட பிரபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை, எழுத்தில் கொண்ட ஈடுபாடு காரணமாக கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத்துறையில் பயணித்து வருகிறேன். அரசியல், நீதிமன்றம், அரசு சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். செய்திகளை தாண்டி அதன் பின்புலங்களை ஆராய்ந்து கட்டுரைகளாக தந்து வருகிறேன். பத்திரிகையாளராக சாமானிய மக்களின் குரலாக ஒலிப்பதில் எவ்வித சமரசமும் இன்றி பணியாற்றி வருகிறேன். Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Senior Digital Content Producer ஆக தற்போது பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி