ஆப்நகரம்

மேகமலையை புலிகள் காப்பகத்திற்காக புலி மாஸ்க் போட்டு மதுரை ஆட்சியரிடம் மன்றாடிய வன ஆர்வலர்கள்!

மேகமலை புலிகள் காப்பகத்தைச் செயல்படுத்தக் கோரியும், மேற்குத்தொடர்ச்சிமலை தொடரைப் பாதுகாக்கக் கோரியும் வைகை நதி மக்கள் இயக்கத்தின் சார்பில் புலி வேடமிட்டபடி நூதன முறையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

Samayam Tamil 30 Jul 2021, 3:34 pm
நாட்டின் 51ஆவது புலிகள் சரணாலயமாக மேகமலை வனப்பகுதியைத் தேசிய புலிகள் காப்பகதுறை அறிவித்துள்ளது.
Samayam Tamil மேகமலையை புலிகள் காப்பகத்திற்காக புலி மாஸ்க் போட்டு மதுரை ஆட்சியரிடம் மன்றாடிய வன ஆர்வலர்கள்!


இந்த சூழலில் புலிகள் காப்பக அறிவிப்பை உடனடியாக நடைமுறைப்படுத்திப் பாதுகாக்கப்பட்ட மேகமலையை வனப்பகுதியாகச் செயல்படுத்த வலியுறுத்தி பல்வேறு தரப்பினர் கோரிக்கைகளை எழுப்பி வருகின்றனர்.

அதேவேளை மேகமலையில் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடர் மற்றும் வைகை ஆற்றைப் பாதுகாக்கக் கோரியும் உலக புலிகள் தினமான இன்று வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் நூதன முறையில் புலிகள் வேடமிட்டபடி ஊர்வலம் செல்லப்பட்டது.

கீழடி அருங்காட்சியகம் வரலாறு மறையாம இருக்கணும் முதல்வரே: எம்பி சு வெங்கடேசன் கடிதம்!
ஊர்வலமாகச் சென்றவர்கள் புலிகள் சரணாலயத்தை அமைப்பது தொடர்பாகப் பதாகைகளை ஏந்தியபடி மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அடுத்த செய்தி