ஆப்நகரம்

ஊசி போட்டால்தான் உள்ளே அனுமதி: மதுரை விஷால் மால் அதிரடி உத்தரவு!

மதுரையில் தனியார் மாலில் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே அனுமதி - தடுப்பூசி போடாதவர்கள் மன வருத்தத்துடன் வீடு திரும்பினர்.

Samayam Tamil 29 Nov 2021, 6:11 pm
கொரோனா தொற்றை தடுப்பதற்காகவும், கட்டுப்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் கோவில்கள், திரையரங்குகள், மால் போன்ற பொது இடங்களில் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது.
Samayam Tamil ஊசி போட்டால்தான் உள்ளே அனுமதி: மதுரை விஷால் மால் அதிரடி உத்தரவு!


இந்த சூழலில் மதுரை சின்னசொக்கிகுளம் பகுதியில் உள்ள தனியார்(விஷால்) மால் இதேபோல் ஊசி போட்டால்தான் உள்ளே அனுமதி என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

குறிப்பிட்ட சின்ன சொக்கிக்குளம் பகுதியில் உள்ள தனியார் மாலில் 60க்கும் மேற்பட்ட கடைகள் ஐந்து திரையரங்குகள் உள்ளது. சாதாரண நாட்களில் 7 ஆயிரம் வரையும் விடுமுறை நாட்களில் 18 ஆயிரம் பேர் வரை வந்து செல்கின்றனர்.

ஈவிகேஎஸ்சை அடித்தால் காசு தறேன்: டாக்டர் சரவணன் மதுரையில் ஆணவம்!
இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே மாலுக்குள் செல்ல அனுமதி வழங்கப்படும் என உத்தரவு போடப்பட்டு உள்ளது. மாலின் நுழைவு பகுதியில் மால் காவலர்கள் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ்களை பார்த்து உறிதி செய்த பின்பே வாடிக்கையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். உடல் வெப்பநிலை பரிசோதனையும், கை சுத்திகரிப்பான் வழங்கிய பின்னரே உள்ளே அனுமதிக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது மாலுக்குள் வரும் வாடிக்கையாளர்கள் தடுப்பூசி செலுத்த ஏதுவாக வாசலில் சிறப்பு முகாம் ஒன்றை நடத்தி வருகின்றனர். தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் அனுமதிக்கப் படாததால் சோகத்துடன் வீடு திரும்புகின்றனர்.

அடுத்த செய்தி