ஆப்நகரம்

கத்தியால் குத்திட்டாங்க, உயிர் பயத்தில் தீக்குளிக்க முயற்சி!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இளைஞர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 23 Nov 2020, 1:27 pm
மதுரை கோவில்பாப்பாகுடியை சேர்ந்தவர் கோபால்சாமி. இவர் மனைவி அனுஷா. இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த சூழலில் கோபால்சாமி திங்கட்கிழமை காலை தனது குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார்.
Samayam Tamil கத்தியால் குத்திட்டாங்க, உயிர் பயத்தில் தீக்குளிக்க முயற்சி!
கத்தியால் குத்திட்டாங்க, உயிர் பயத்தில் தீக்குளிக்க முயற்சி!


அலுவலக வாசலில் நின்றபடி கோபால்சாமி தனது கைப்பையில் கொண்டுவந்திருந்த மண்ணெண்ணெய்யைக் கேனை எடுத்து தன் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் நின்றிருந்த போலீசார் கோபால்சாமி செயலை தடுத்து நிறுத்தி அவரை கைது செய்தனர்.

கைது செய்த கோபால்சாமியை தல்லாகுளம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் கோபால்சாமிக்கும் அவரது சகோதரர் வெண்மணி என்பவருக்கும் இடையே ஏற்கனவே சொத்து விவகாரம் தொடர்பாக நிலவி வரும் முன்விரோதம் காரணமாகவே இந்த தற்கொலை முயற்சியில் அவர் ஈடுபட்டது தெரியவந்தது.

இதற்கிடையே கோபால்சாமியைக் கத்தியால் குத்தியதாக வெண்மணி மீது அலங்காநல்லூர் போலீசார் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

செத்தது யாரு..?: மதுரை போலீஸ் நடத்திய சிறப்பு முகாம்!

இந்நிலையில் தன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய வெண்மணி உள்ளிட்ட பத்து பேரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோபால்சாமி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்துள்ளது,

இதுதொடர்பாக தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபால்சாமியிடம் இதுதொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி