ஆப்நகரம்

இவ்வளவு ஆண்டு பழைய கோயில்?; கும்பாபிஷேகம் விழாவில் நெகிழ்ச்சி!

மயிலாடுதுறையில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் விழா கோலாகலமாக நடந்தது. இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

Samayam Tamil 27 Oct 2021, 8:15 pm
மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான பலநூறு ஆண்டுகள் பழமையான பிரசன்ன மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
Samayam Tamil கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது
கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது


வண்டிக்காரர் தெரு மாரியம்மன் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த ஆலயம் மயிலாடுதுறை மாவட்டத்தில் சுற்றுப் பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாக உள்ளது.

இந்த ஆலயத்தில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நேற்று முன்தினம் விக்னேஷ்வரபூஜையோடு துவங்கியது. தொடர்ந்து ஐந்து கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று முடிந்தது.

இதனை முன்னிட்டு யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்ட கடம் புறப்பாடு நடைபெற்றது. வேதமந்திரங்கள் மேளதாள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட புனிதநீர் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு குடமுழக்கு விழா நடைபெற்றது.

பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு; கட்டாயம் பின்பற்றவும் அறிவுறுத்தல்!

இதை தொடர்ந்து அம்மனுக்கு மகா அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது. இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், வணிகர் சங்கத்தினர் மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

அடுத்த செய்தி