ஆப்நகரம்

பருத்தி ஏலத்தில் லட்சக்கணக்கில் மோசடி.. ரோட்டை பிளாக் செய்த விவசாயிகள்.. மயிலாடுதுறையில் பரபரப்பு!

பருத்தி ஏலத்தில் பல லட்சம் ரூபாய் மோசடி நடைபெறுவதை கண்டித்து மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 25 Jun 2022, 12:01 pm

ஹைலைட்ஸ்:

  • வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி ஏலத்தில் முறைகேடு
  • வாரம் தோறும் பல லட்சம் ரூபாய் மோசடி செய்வதாக குற்றச்சாட்டு
  • விவசாயிகள் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டம்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி ஏலத்தில் முறைகேடு நடைபெறுவதை கண்டித்து விவசாயிகள் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை குத்தாலம் சீர்காழி செம்பனார்கோயில் ஆகிய நான்கு இடங்களில் வேளாண் விற்பனை குழு சார்பில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 6 ஆயிரத்து 500 ஏக்கரில் இந்த ஆண்டு பருத்தி சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அறுவடை செய்யப்படும் பருத்தி 100 கிலோ கொண்ட மூட்டைகளாக கட்டப்பட்டு ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு விற்பனைக்காக எடுத்து வரப்படுகிறது. இங்கு திருப்பூர், மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வருகை தரும் வியாபாரிகள் மறைமுக ஏல முறையில் பருத்தியை வாங்கிச் செல்கின்றனர். இதில் பல்வேறு விதமான மோசடிகள் நடப்பதாக கூறி பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான விவசாயிகள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் பருத்தி ஏலம் நடைபெறுகிறது. சுமார் 2500 குவின்டால் (250 டன்) பருத்தி ஏலத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் 100 கிலோ கொண்ட மூட்டைக்கு 3 கிலோ வரை எடை குறைவாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்வதாகவும், இதனால் 100 கிலோவிற்கு 300 ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

முதலாளியை சந்திக்க டெல்லி சென்றுள்ளார் ஓபிஎஸ்... கார்த்தி சிதம்பரம் 'நச்' பதில்..!

2500 குவிண்டாலுக்கு சுமார் 75 ஆயிரம் ரூபாய் விவசாயிகள் பணம் கையாடல் செய்யப்படுகிறது என்றும், 100 கிலோ மூட்டைக்கு 15 ரூபாய் லஞ்சமாக பணம் கேட்பதால் இதிலும் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. ஒவ்வொரு வாரமும் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை முறைகேடாக விவசாயிகளிடம் எடை இழப்பு மற்றும் கையூட்டு பெறப்படுகிறது என்று குற்றம்சாட்டி, விவசாயிகள் இன்று திடீரென்று ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகள் சமாதானம் செய்த நிலையில், தொடர்ந்து மயிலாடுதுறை, கும்பகோணம் நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் வியாபாரிகளுடன் அதிகாரிகள் சிண்டிகேட் முறையில் தொடர்பு வைத்துக்கொண்டு குறைவான தொகையை நிர்ணயம் செய்வதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த போராட்டம் காரணமாக குத்தாலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி