ஆப்நகரம்

நேபாளத்தில் அசத்தல்; கெத்து காட்டிய மாணவர்கள்!

நேபாளம் நாட்டில் கலக்கு கலக்குன்னு கலக்கிய மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Samayam Tamil 4 Dec 2021, 8:08 pm
நேபாள நாட்டில் கடந்த 26ம் தேதி முதல் 29ம் தேதி வரை சர்வதேச அளவிலான இந்தோ-நேபால் இளையோர் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்தியா நேபாளம் வங்கதேசம் பூட்டான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்றனர்.
Samayam Tamil வெற்றி பெற்ற மாணவர்கள்
வெற்றி பெற்ற மாணவர்கள்


இந்த போட்டிகளில் ஒரு பகுதியாக கோக்கோ போட்டி நடைபெற்றது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 12 அணிகள் கோகோ போட்டியில் பங்கேற்றன. லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடைபெற்ற போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியும் நேபாள் அணியும் மோதின.

வாலிபர் இதயத் துடிப்பை மீட்ட நர்ஸ்; மறுவாழ்வு தந்தவருக்கு பாராட்டுகள்!

இந்திய அணி சார்பில் மயிலாடுதுறையை சேர்ந்த அல்ஹாஜ் பள்ளி மற்றும் ராஜ் மெட்ரிகுலேஷன் ஐ சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை பெற்றது. தங்கம் வென்று ஊர் திரும்பிய மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

அடுத்த செய்தி