ஆப்நகரம்

வாழ்த்து மழையில் மீன் வெட்டும் விதவை; ‘டாக்டர் அம்மா’!

கணவன் மறைந்து, உறவினர்கள் கைவிட்ட நிலையில் ஒரே மகளை படிக்க வைத்து டாக்டர் ஆக்கிய மீன் வெட்டும் விதவை பெண்ணுக்கு பாராட்டு குவிந்தபடி உள்ளது.

Samayam Tamil 29 May 2022, 4:58 pm
மயிலாடுதுறை புறநகர் பகுதியை சேர்ந்தவர் ரமணி. இவரது மகன் ரவிச்சந்திரன். மகள் விஜயலட்சுமி. கடந்த 24ஆண்டுகளுக்கு முன்பாக விஜயலட்சுமி 11 மாத கைக்குழந்தையாக இருக்கும்போது ரமணியின் கணவர் உடல் நலக் குறைவால் இறந்தார்.
Samayam Tamil ரமணி, விஜயலட்சுமி
ரமணி, விஜயலட்சுமி


கைக்குழந்தைள் இருந்த ரமணியை உறவினர்கள் கைவிட்டதால் மயிலாடுதுறை மார்க்கெட்டில் மீன் சுத்தம் செய்து கொடுக்கும் வேலைக்கு சென்றார். அங்கு மீன் மார்க்கெட்டில் மீன்களை உரசி செதில்கள் நீக்கி, துண்டுப்போட்டு கொடுப்பது இவரது பணி.

இதில் கிடைக்கும் சொற்ப வருவாயை கொண்டு ரமணி தனது குழந்தைகளை வைத்துக்கொண்டு குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில் மூத்த மகன் ரவிச்சந்திரன் ரத்தநாள சுரப்பி குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டார்.

ஒரே அணியில் பாமக, விசிக?; திருமாவளவன் திடீர் அழைப்பு!

இதனால் ரவிச்சந்திரன் ஆயுள் முழுவதும் மருந்து மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டிய சூழல் இருந்தது. இதன் காரணமாக 10ம் வகுப்புடன் மேல் படிப்பை தொடர முடியாமல் வீட்டில் இருக்கிறார்.

இந்நிலையில் ரமணியின் ஒரே மகள் விஜயலட்சுமி 12ம் வகுப்பு படித்து விட்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் சேர்ந்தார். மருத்துவம் படிக்க வேண்டும் என்கிற மகளுடைய ஆசையை நிறைவேற்ற தனது சொந்த வீடு மற்றும் நகையை விற்று அதில் கிடைத்த பணத்தை கொண்டு, ரஷ்யாவில் மருத்துவம் படிக்க வைத்தார்.

அனல் கக்கிய திருமாவளவன்; அதிர்ச்சியில் உறைந்த பாஜக!

தற்போது விஜயலட்சுமியின் படிப்பு முடிந்துள்ள நிலையில் ரஷ்யாவில் இருந்து டாக்டராக திரும்பியுள்ளார். இந்தியாவில் டாக்டராக பணியாற்ற வேண்டிய அங்கீகார தற்போது தேர்வு எழுத வேண்டி உள்ளதால் அதற்காகவும் படித்து வருகிறார்.

கணவன் இறந்து, உறவினர்கள் கைவிட்ட நிலையில் மீன் மார்க்கெட்டில் கூலி வேலை செய்து 2 குழந்தைகளையும் வளர்த்து ஒரே மகளை வெளிநாட்டில் படிக்க வைத்து டாக்டர் ஆக்கியுள்ள ரமணியை கிராம மக்கள் வெகுவாக பாராட்டுகின்றனர்.

அடுத்த செய்தி