ஆப்நகரம்

திருடப்பட்ட நகை; மீட்டுத்தராத போலீஸ்… தீக்குளிக்க முயன்ற மூதாட்டி!

திருடப்பட்ட 4 பவுன் நகையை போலீசார் மீட்டுதரவில்லை என்று கூறி மூதாட்டி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க வந்ததால் பரபரப்பு.

Samayam Tamil 24 Jan 2022, 9:48 pm
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குத்தாலம் ராஜகோபாலபுரம் மேலசாலைத் தெருவைச் சேர்ந்த சாமிநாதன் மனைவி கமலா (வயது 60) என்பவர் பையில் வாட்டர் பாட்டிலில் மண்ணெண்ணையுடன் தீக்குளிக்க போவதாக கூறி மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு வந்தார்.
Samayam Tamil தடுத்து நிறுத்திய போலீசார்


இதனையறிந்த அறிந்த பாதுகாப்புபணி போலீசார் கமலாவிடம் இருந்த மண்ணெண்ணை பாட்டிலை பறித்து அப்புறப்படுத்தினர். அப்போது கமலா தனக்கு தீர்வு கிடைக்காததால் தீக்குளிக்க போகிறேன் என்னை விடுங்கள் என்று போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


தொடர்ந்து கமலாவை போலீசார் சமாதானம் செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக கமலா கூறுகையில்:
"கணவர் இறந்து போன நிலையில் குத்தாலத்தில் தனியாக வசித்து வருகிறேன். கடந்த 2017 ஜூன் 2-ஆம் தேதி இரவு 11 மணி அளவில் வீட்டின் வாசல் கேட்டை பூட்டும்போது அங்கு வந்த அடையாளம் தெரிந்த 2 பேர் எனது வாயைப் பொத்தி கழுத்தை நெறித்தனர்.

நான் மயங்கி விழுந்த பின்னர், என்னிடமிருந்த 4 பவுன் நகை மற்றும் ரூ. 41 ஆயிரம் பணத்தை பறித்துச் சென்றனர். இதுகுறித்து குத்தாலம் போலீஸ் நிலையத்தில் என்னிடம் திருடிச் சென்றவர்களின் பெயரைக் குறிப்பிட்டு புகார் அளித்திருந்தேன்.

புகாரை பெற்ற அன்றைய பெண் காவல் ஆய்வாளர் திருட்டு போன பொருளை கைப்பற்றி தன்னிடம் ஒப்படைக்கவில்லை என்றும், திருடியவர்கள் மீது வழக்கும் போடவில்லை என்றும் இதுகுறித்து தஞ்சை டிஐஜி, மாவட்ட காவல் கண்காகணிப்பாளர் என பலரிடம் புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.

விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காத திமுக அரசு… போராட்டத்தில் குதித்த அதிமுகவினர்!

இதனால் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் திருடியவர்கள் மீதும், வழக்கு பதியாத அன்றைய காவல் ஆய்வாளர் மீதும் புகார் மனு கொடுத்தேன். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டு, 4 மாதங்கள் கடந்தும் குத்தாலம் போலீசார் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் மன உளைச்சலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த தண்ணை. போலீசார் தடுத்து விட்டனர் என்றார். தொடர்ந்து தனது புகாரை மனு பெட்டியில் போட்டுசென்றார். இதுகுறித்து குத்தாலம் போலீசார் கூறுகையில் மூதாட்டியின் புகாரில் உண்மைத்தன்மை இல்லை என்றனர்.

அடுத்த செய்தி