ஆப்நகரம்

கீழமூவர்கரை கிராம மக்கள் அதிரடி; பாராட்டிய சீர்காழி டிஎஸ்பி.. இதுதான் விஷயம்!

சீர்காழி அருகே கீழமூவர்கரை கிராம மக்கள் தங்களது சொந்த முயற்சியில் எடுத்த நடவடிக்கையை, சீர்காழி டிஎஸ்பி நேரில் வந்து பாராட்டியுள்ளார்.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 30 Sep 2022, 5:46 pm

ஹைலைட்ஸ்:

  • 800-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 2000 பேர் வசித்து வரும் மீனவ கிராமம்
  • அடிக்கடி திருடு போகும் படகு எஞ்சின்கள் மற்றும் டீசல்
  • திருட்டை தடுக்க கிராம மக்கள் முயற்சியால் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை திறந்து வைத்த சீர்காழி டிஎஸ்பி
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil சீர்காழி டிஎஸ்பி
சீர்காழி அருகே கீழமூவர்கரை கடற்கரையோர கிராமத்தில் கண்காணிப்பு கேமராக்களை சீர்காழி டிஎஸ்பி திறந்து வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடற்கரையோர கிராமமான கீழமூவர்கரை மீனவ கிராமத்தில் 800-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 2000 பேர் வசித்து வருகின்றனர். மீன்பிடி தொழில் மட்டுமே பிரதானமாக கொண்டுள்ள மீனவ கிராம மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தின் முக்கிய பங்காக விளங்கும் படகுகளை தொழில் நேரம் போக மற்ற நேரங்களில் கடற்கரை ஓரத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.


இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடற்கரை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போட்டுகளின் இஞ்சின்கள், அதில் உள்ள டீசல்கள் அடிக்கடி திருட்டுப் போய் வந்துள்ளது. இதனால் கிராமத் தலைவர் தலைமையில் ஒன்று கூடிய பஞ்சாயத்தார்கள் மற்றும் கிராம மக்கள் ஊரைச் சுற்றி கண்காணிப்பு கேமரா பொருத்துவது என முடிவு செய்தனர். அதன்படி ஊர் பொது நிதியில் இருந்து சுமார் மூன்று லட்சம் மதிப்பில் கடற்கரை ஓரம், ஊரின் மையப்பகுதி, பள்ளி வளாகம் ஆகிய இடங்களில் பெரிய அளவிலான 15 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.

இதன் திறப்பு விழாவிற்கு சீர்காழி டிஎஸ்பி லாமேக் தலைமை வகித்து கண்காணிப்பு கேமராக்களை திறந்து வைத்து பேசுகையில்: கீழமூவக்கரை மீனவ கிராமத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இந்த கிராமத்தை முன்னுதாரணமாக கொண்டு கடற்கரையோர கிராமப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி வெளி நபர்கள் நடமாட்டம் உள்ளதா, போன்ற பல குற்ற செயல்களை தடுக்கும் விதமாக இந்த கண்காணிப்பு பணியை அனைத்து பகுதிகளிலும் ஏற்படுத்த வேண்டும் என்றார்.

மயிலை ஆக்கிரமிப்பு கோயில் நிலம் மீட்பு - வக்கீல்களால் பரபரப்பு

நிகழ்ச்சியில் திருவெண்காடு இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவடிகள், ஆறுமுகம் . மற்றும் கீழமூவர்கரை கிராம தலைவர்கள், நாட்டாமை பஞ்சாயத்தார்கள், ஊர் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி