ஆப்நகரம்

தேர்தல் திடீரென தள்ளி வைப்பு; தேர்தல் ஆணையம் அதிரடி!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைத்து மாநில தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 12 Feb 2022, 9:29 pm
மயிலாடுதுறை, தருமபுரம் சாலையை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மனைவி அன்னதாட்சி (64). இவர், மயிலாடுதுறை நகராட்சி 19வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட்டு தொண்டர்களுடன் சேர்ந்து வாக்கு சேகரித்து வந்தார்.
Samayam Tamil மாநில தேர்தல் ஆணையம்
மாநில தேர்தல் ஆணையம்



தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று காலை அன்னதாட்சி உணவு சாப்பிடாமல் விரதம் இருந்து உள்ளார். மதியம் உணவு அருந்திய அவர் மாலை சின்ன மாரியம்மன் கோவிலில் நடந்த குத்து விளக்கு பூஜையில் கலந்து கொண்டுள்ளார்.

வசமாக மாட்டிய முதல்வர் ஸ்டாலின்; பகீர் தகவல் கூறும் ஓ.பன்னீர்செல்வம்!

அங்கு பூஜையில் கலந்து கொண்டிருந்தபோது அன்னதாட்சிக்கு லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அன்னதாட்சி உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதிமுக வேட்பாளர் அன்னதாட்சி இறந்து போனதால் அவரது குடும்பத்தினர் மட்டுமல்லாமல், அதிமுகவினரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கொளுத்தி போட்ட ஓ.பன்னீர்செல்வம்; கொழுந்துவிட்டு எரிகிறது..பிரச்சனை!

இந்நிலையில் மயிலாடுதுறை நகராட்சியில் 19வது வார்டுக்கான தேர்தலை ஒத்தி வைத்து மாநில தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது. இதனால் 19வது வார்டில் தேர்தல் பணிகள் முடிவுக்கு வந்துள்ளது.

அடுத்த செய்தி