ஆப்நகரம்

படிக்கவே முடியலை; ‘விட்டத்தையே’ பார்க்கும் மாணவர்கள்!

பள்ளி மாணவர்கள் படிக்க முடியாமல் விட்டத்தையே பார்த்துக்கொண்டு இருப்பதால் பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Samayam Tamil 1 Jul 2022, 8:25 pm
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா நெப்பத்தூர் கிராமத்தில் 150 வருட பழமையான தனியார் கட்டிடத்தில் ஸ்ரீ மீனாட்சி அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது.
Samayam Tamil பழுதடைந்த அரசு பள்ளி
பழுதடைந்த அரசு பள்ளி


இங்கு பள்ளி நிர்வாகத்திற்கும், கட்டிட உரிமையாளர்களுக்கும் இடையே இடப்பிரச்சினை நிலவி வருவதால் பள்ளி கட்டிடத்தை சீரமைக்க முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் சிதிலம் அடைந்து அபாயகரமான நிலையில் உள்ள பள்ளி கட்டிடத்தை மாற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது சீர்காழி வட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது.

அதிர்ச்சியில் உறைந்த அரசு ஊழியர்கள்; பறந்து வந்த திடீர் உத்தரவு!

இதில் ஊராட்சி மன்ற நூலக கட்டிடத்தில் பள்ளி தற்காலிகமாக இயங்குவதற்கு ஏற்பாடு செய்வதாகவும், ஆறு மாத காலத்திற்குள் புதிய கட்டிடம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளிக்தப்பட்டது‌.

இதன் பின்னர் இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் அனுமதி கோரி கேட்டபோது ஊராட்சி மன்றத்துக்கு சொந்தமான கட்டிடத்தை தனியார் பள்ளிக்கு வழங்க முடியாது என கூறியுள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளுடன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸிடம் புகார் மனு கொடுத்தனர்.

அதிமுகவில் இருந்து எடப்பாடி நீக்கம்; தலைமைக்கழகம் பெயரில் போஸ்டர்!

மேலும் அபாயகரமான நிலையில் கல்வி பயிலும் மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக பள்ளியை வேறு இடத்திற்கு மாற்ற கோரியும், தங்களது பகுதிக்கு அருகாமையிலேயே பள்ளி கட்டிடம் அமைய மாவட்ட ஆட்சியர் லலிதா நேரடியாக வந்து ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி