ஆப்நகரம்

மயிலாடுதுறையில் கஞ்சா விற்பனை; போலீசார் நடத்திய அதிரடி ரெய்டு.. இழுத்து மூடப்பட்ட கடைகள்!

பள்ளி மாணவர்களிடையே கஞ்சா புழக்கத்தை அடுத்து, மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்த 20க்கும் மேற்பட்ட கடைகளுக்கு போலீசார் சீல் வைத்தனர்.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 21 Sep 2022, 10:50 am

ஹைலைட்ஸ்:

  • பள்ளி மாணவர்களிடையே அதிகரிக்கும் கஞ்சா பழக்கம் வாட்ஸ் அப் வீடியோ செய்தி
  • காவல்துறையினர் மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் கிராம பகுதிகளில் 20 குழுக்களாக பிரிந்து தேடுதல் வேட்டை
  • குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட 20-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல்
  • மொத்த வியாபாரியை கைது செய்ய பொதுமக்கள் கோரிக்கை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட 20-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல்
மயிலாடுதுறை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே அதிகம் புலங்குவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குத்தாலம் பள்ளி மாணவன் ஒருவனை கஞ்சா அடித்த சக மாணவர்கள் தாக்கியதாகவும், அதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் காவல்துறையிடம் கூறி நடவடிக்கை இல்லை என்று தெரிவித்த வாட்ஸ் அப் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டது.
இதனையடுத்து கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்பவர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா உத்தரவிட்டார். அதன் தொடர்ச்சியாக சீர்காழி டிஎஸ்பி பழனிசாமி தலைமையில் ஆறு குழுக்கள் அமைக்கப்பட்டது. இதுபோல் குத்தாலத்தில் ஆயுதப்படை டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டது. ஒவ்வொரு குழுவிலும் வருவாய் துறை, ஊரக உள்ளாட்சித் துறை, உணவு பாதுகாப்பு துறை, சுகாதாரத் துறை அதிகாரிகள் இடம் பெற்றனர்.


மேலும் மயிலாடுதுறையில் 60 போலீசார் மஃப்டி உடையில் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது நகராட்சி பகுதி மற்றும் கிராமப்புற பகுதிகளான நீடூர் மாப்புடுகை உள்ளிட்ட இடங்களில் சிறுசிறு பெட்டி கடைகள் மளிகை கடைகளில் சோதனை செய்ததில் ஏராளமான குட்கா பான் மசாலா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை பகுதியில் 22 கடைகளுக்கும், குத்தாலம் பகுதியில் குத்தாலம் நகரம் கீழவெளி அஞ்சல்வார்தலை, உள்ளிட்ட பகுதிகளில் 7 கடைகளுக்கு காவல்துறையினர் சீல் வைத்து கடை உரிமையாளர்கள் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்ட அதிமுகவில் உட்கட்சி பூசல்; ஓரம் கட்டப்படும் ஓ.எஸ். மணியன்..!

இதுபோல் சீர்காழி பகுதியில் நடைபெற்ற ஆய்வில் நான்கு கடைகளுக்கு தாசில்தார் செந்தில்குமார் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. ஒவ்வொரு கடைக்கும் தலா ஐந்தாயிரம் முதல் 30000 வரை அபராதம் விதித்தனர். சில்லறை கடைகளை ரைடு செய்து சீல் வைத்த அதிகாரிகள், சில்லறை கடைகளுக்கு விற்பனை செய்யும் மொத்த வியாபாரிகள் மீது எப்பொழுது நடவடிக்கை எடுப்பார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி