ஆப்நகரம்

நாகையில் பரபரப்பு: இந்திய கடற்படை அலுவலகத்தில் சுவர் ஏறி குதித்த மர்ம நபர்!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள இந்திய கடற்படை அலுவலகத்தில் தீடிரென மர்ம நபர் ஒருவர் உள்ளே புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 11 Apr 2023, 3:33 pm

ஹைலைட்ஸ்:

  • நாகப்பட்டினம் இந்திய கடற்படை அலுவலகத்தில் தீடிரென புகுந்த மர்ம நபர்
  • மனநலம் பாதிக்கப்பட்டவர் போல இருப்பதாக தகவல்
  • பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இந்திய கடற்படை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த நிலையில், இந்த கடற்படை அலுவலக சுற்றுச்சுவரில் ஏறி, திடீரென மர்ம நபர் ஒருவர் உள்ளே குதித்து அலுவலகத்திற்குள் புகுந்துள்ளார்.
கடற்படை வீரர்கள் அதிர்ச்சி

இதனை சற்றும் எதிர்பாராத அங்கு இருந்த கடற்படை வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததாக தெரிகிறது.
நாகை அருகே முதன்முறையாக வாட்டர் ஆப்பிள் சாகுபடி: நல்ல வருமானம் கிடைக்குது... பட்டதாரி விவசாயி சாதனை!
மனநலம் பாதிக்கப்பட்டவர்

இதையடுத்து கடற்படை அதிகாரிகள், நாகை டவுன் காவல் நிலையத்தில் அந்த நபரை ஒப்படைத்தனர். அங்கு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் கேரளா மாநிலம் எர்ணாகுளம் கடதிபரம்ப புள்ளுறிட்டி பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. அந்த நபர் நவுசாத் என்பவரது மகன் நிஸாத் (வயது 27) என்பதும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருப்பதும் தெரியவந்தது.

பல்வேறு கோணங்களில் விசாரணை

கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து சென்னைக்கு சென்றுவிட்டு, அங்கிருந்து ரயில் மூலம் நாகூர் தர்காவுக்கு வந்து தங்கி உள்ளார். இந்தநிலையில் தான் அவர், இந்திய கடற்படை அலுவலக சுற்றுச் சுவரில் ஏறி உள்ளே குதித்துள்ளார்.

காவல் துறையினர், அவர் எதற்காக இங்கு வந்தார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி