ஆப்நகரம்

குடியிருப்பு பகுதிக்குள் கழிவு நீர்.. கடுப்பான பொதுமக்கள்.. இன்ஸ்பெக்டரை தள்ளிவிட்டு வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு!

நாமக்கல் அருகே தனியார் நூற்பாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 5 Jul 2022, 5:23 pm

ஹைலைட்ஸ்:

  • தனியார் நூற்பாலை வளாகத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் சுகாதார சீர்கேடு
  • கிராம மக்கள் 3 மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் போராட்டம்
  • காவல் ஆய்வாளரை தள்ளிவிட்டு வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil கிராம மக்கள் 3 மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் போராட்டம்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே தனியார் நூற்பாலை வளாகத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி கிராம மக்கள் 3 மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த முயன்ற காவல் ஆய்வாளரை தள்ளிவிட்டு வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே பாதரை ஊராட்சியில் செயல்பட்டு வரும் தனியார் நூற்பாலை வளாகத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீரை தேக்கி வைத்து, கால்வாய் மூலம் அருகில் உள்ள பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் வெளியேற்றி வந்தனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், விவசாய விளை நிலங்களும் பாதிக்கப்படுவதாக கூறி வருவாய் துறையினர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலரிடம் கடந்த 6 மாதங்களாக புகார் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் தொடர்ந்து கழிவு நீரை வெளியேற்றும் ஆலை நிர்வாகத்தை கண்டித்து திருச்செங்கோட்டில் இருந்து குமாரபாளையம் செல்லும் சாலையில் 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது தொடர்ந்து ஆலை நிர்வாகம் அலட்சிய போக்குடன் நடந்துகொள்வதுடன், சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினர். இதற்கிடையே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் சந்திரகுமார் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்ற போது, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கிராம மக்கள், அவரை தள்ளிவிட்டு வாக்குவாதம் செய்தனர்.

Mk Stalin Speech: நான் சர்வாதிகாரி.. யார் சிக்கினாலும் தண்டனை வேற மாதிரி இருக்கும்.. எச்சரித்த முதல்வர்!

தொடர்ந்து 3மணி நேரமாக நடைபெற்ற போராட்டத்தில் வட்டாட்சியர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தனியார் நூற்பாலை வளாகத்தில் இருந்து கழிவுநீர் வெளியேற்றம் செய்யப்படுவது தடுக்கப்படும் என உறுதியளித்தையடுத்து, கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் திருச்செங்கோடு முதல் குமாரபாளையம் செல்லும் சாலையில் 4 கிலோ மீட்டர் தூரம் வரை கனரக வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மேலும் சுமார் 3 மணி நேரம் வரை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி