ஆப்நகரம்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் சமபந்தி உணவு; பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்திய கலெக்டர்!

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சமபந்தி உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 16 Aug 2022, 10:46 am

ஹைலைட்ஸ்:

  • நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சமபந்தி
  • மாவட்ட ஆட்சியர் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பொதுமக்களுடன் அமர்ந்து உணவு அருந்தினர்
  • திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் ஏழை எளியோருக்கு மாவட்ட ஆட்சியர் புத்தாடைகள் வழங்கினார்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்திய கலெக்டர்
ஏழை, பணக்காரன் என்ற வேற்றுமை பார்க்காமல் அனைவரும் சமம் என்பதை உணர்த்தும் விதமாக, ஆண்டுதோறும் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சமபந்தி உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அதன்பின் திருக்கோயில் மண்டபத்தில் அறுசுவை உணவுடன் சமபந்தி தயார் செய்யப்பட்டிருந்தது. இதில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங், நகர்மன்ற தலைவர் கலாநிதி, துணை தலைவர் பூபதி மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுடன் அமர்ந்து சமபந்தி உணவு அருந்தினர்.

பாஜகவுக்கு அடுத்த ஷாக்; தலைவரை தட்டி தூக்கியது போலீஸ்!

முன்னதாக திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் ஏழை எளியோருக்கு மாவட்ட ஆட்சியர் புத்தாடைகள் வழங்கினார்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி