ஆப்நகரம்

NRI பாஸ்போர்ட்டுகள் ரத்து.. காரணம் இதுதான்!

துணைவியரை கைவிட்ட சுமார் 382 வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பாஸ்போர்ட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 4 Feb 2021, 9:22 pm
துணைவியரை கைவிட்ட சுமார் 382 என்ஆர்ஐகளின் பாஸ்போர்ட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Samayam Tamil Indian passport


2015ஆம் ஆண்டு முதல், வெளிநாடுகளில் வாழும் என்ஆர்ஐ நபர்கள் துணைவியை கைவிட்டதால் சுமார் 382 என்ஆர்ஐ நபர்களின் பாஸ்போர்ட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இவர்களை சார்ந்த 216 பெண் சட்ட உதவியும், நிதி உதவியும் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இன்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி பர்தாப் சிங் பாஜ்வா கேள்வியெழுப்பினார். அதற்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் அளித்துள்ள பதிலில், “வெளிநாடுகளில் நெருக்கடியில் இருக்கும் இந்தியர்களுக்கு உதவுவதற்காக அனைத்து இந்திய தூதரகங்கள் மற்றும் சாவடிகளில் இந்திய சமூக நல நிதியம் அமைக்கப்பட்டுள்ளது.

இனி விமானத்தில் போக முடியாது.. அரபு வாழ் தமிழர்களுக்கு கெட்ட செய்தி!
இதற்கான விதிமுறைகளும் 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருத்ஹ்டப்பட்டது. வெளிநாட்டில் நெருக்கடியில் இருக்கும் இந்திய பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட துணைவிகள் ஆகியோருக்கு சட்ட உதவிகள் வழங்க விதிமுறைகள் திருத்தப்பட்டன.

இந்திய மகளிர் அமைப்புகள், இந்திய சமூக அமைப்புகள், தொண்டு நிறுவனங்களால் சட்ட ஆலோசனை மற்றும் சட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. 2015ஆம் ஆண்டு முதல் 216 பெண்களிடம் இருந்து சட்ட மற்றும் நிதி உதவி கேட்டு கோரிக்கைகள் வந்துள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 175 பெண்களுக்கு வழங்கப்பட்ட நிதி உதவிக்காக 63.71 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது. துணைவியை கைவிட்ட என்ஆர்ஐ நபர்கள் 382 பேரின் பாஸ்போர்ட்டுகளை இந்திய மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களும், இந்திய தூதரகங்களும் ரத்து செய்துள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி