ஆப்நகரம்

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு குட்-நியூஸ்: ஆர்பிஐ புதிய வசதி!

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான முக்கியமான சேவையை அளிக்கவிருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது

Samayam Tamil 6 Aug 2022, 6:46 pm
வெளிநாடுகளில் இந்தியர்கள் ஏராளமாக வசித்து வரும் நிலையில், மூத்த குடிமக்களான இந்தியாவில் வசிக்கும் அவர்களது பெற்றோர்கள் உள்பட அவர்களது குடும்பத்தினர் பலரும், தாங்கள் உபயோக்கும் சேவைகளுக்கான பயன்பாட்டுக் கட்டணங்களை செலுத்துவதில் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
Samayam Tamil ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி


இவர்களுக்கு உதவுவதற்காக எல்லை தாண்டிய உள்நோக்கிய பில் பேமெண்ட்டுகளை ஏற்றுக்கொள்ளும் வகையில் பாரத் பில் பேமென்ட் சிஸ்டத்தை செயல்படுத்த ரிசர்வ் வங்கி முன்வந்துள்ளது. இது வெளிநாடு வாழ் இந்தியர்கள் அங்கிருந்தபடியே, இந்தியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினரின் பில் பேமெண்ட்ஸ் பயன்பாட்டு கட்டணம், கல்வி மற்றும் இதுபோன்ற பிற கட்டணங்களை மேற்கொள்ள உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சேவையைத் தற்போது இந்தியா முழுவதும் பிரபலமாகியிருக்கும் பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் (BBPS) வாயிலாகச் செய்யப்பட்டு முடிவு செய்யப்பட்டு உள்ளது. ரிசர்வ் வங்கி தனது நிதிக் கொள்கைக் குழு கூட்ட முடிவுகளை அறிவிக்கும் அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

1200 ஆண்டுகள் பழைமையான இந்து கோயில்... பாகிஸ்தானில் மீண்டும் திறப்பு!
“BBPS வசதி தற்போது இந்தியாவில் வசிப்பவர்களுக்கு மட்டுமே கிடைத்து வருகிறது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐக்கள்) இந்தியாவில் உள்ள அவர்களது குடும்பங்கள் சார்பாக பயன்பாடு, கல்வி மற்றும் பிற பில் செலுத்துதல்களை மேற்கொள்வதற்கு வசதியாக, BBPS-ஐ எல்லை தாண்டி செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் (பிபிபிஎஸ்) என்பது பில் பணம் செலுத்துவதற்கான தளமாகும். 20,000 க்கும் மேற்பட்டவர்கள் இதில் இணைந்து பலன் பெற்று வருகிறார்கள். ஒவ்வொரு மாதமும் 8 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் இதில் நடக்கின்றன. இந்தப் பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் வாயிலாக மின்சாரம், டெலிகாம், DTH, கேஸ், தண்ணீர் பில் போன்ற தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் சேவைக்களுக்கான கட்டணத்தை செலுத்த முடியும்.

இதேபோல் இன்சூரன்ஸ் ப்ரீமியம், மியூச்சவல் பண்ட்ஸ், பள்ளிக் கட்டணம், கல் நிறுவனங்களுக்கான கட்டணம், கிரெடிட் கார்டு, பாஸ்டேக் ரீசார்ஜ், உள்ளூர் வரி, ஹவுசிங் சொசைட்டி கட்டணம் எனப் பலவற்றை ஒற்றைச் சாளரம் முறையில் இதன் மூலம் செலுத்த முடியும். இந்தச் சேவை தற்போது இந்தியாவில் இருப்பவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிலை இருந்தது. இந்த சேவையைத்தான் தற்போது, வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு அளிக்கவும் ஆர்.பி.ஐ., முடிவு செய்துள்ளது.

இந்தச் சேவை மூலம் வெளிநாட்டில் வாழும் நபரின், குடும்பங்கள் இந்தியாவில் இருக்கும் பட்சத்தில் அவர்கள் உபயோகிக்கும் அனைத்து சேவைகளுக்கான கட்டணங்களையும் வெளிநாடுகளில் இருந்தபடியே செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி