ஆப்நகரம்

இங்கிலாந்து - இந்தியா விமான சேவை மீண்டும் தொடங்கியது!

இங்கிலாந்து-இந்தியா இடையேயான விமான சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளன.

Samayam Tamil 8 Jan 2021, 5:14 pm
இங்கிலாந்தில் புதிய கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதால் கோவிட் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் பரவத் தொடங்கியது. இந்த வைரஸ் பழைய கொரோனாவை காட்டிலும் 70% அதிக வேகத்தில் பரவுவதாக பிரிட்டன் அரசு தெரிவித்திருந்தது.
Samayam Tamil Air india


இந்த வைரஸ் மற்ற நாடுகளுக்கு பரவாமல் தடுப்பதற்காக பல்வேறு நாடுகள் பிரிட்டன் இடையேயான விமானப் பயணத்துக்கு தடை விதித்தன. இதன்படி, இந்தியாவும் கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் தேதி முதல் பிரிட்டன் இடையேயான விமானங்களுக்கு தடை விதித்தது.

H-1B Visa தடைகளை நீக்க ஜோ பைடனிடம் இந்தியர்கள் கோரிக்கை!
தடை முடிந்து ஜனவரி 6ஆம் தேதி முதல் இந்தியாவில் இருந்து இங்கிலாந்து செல்லும் விமானங்கள் இயங்கத் தொடங்கின. இந்நிலையில், இன்று முதல் இங்கிலாந்தில் இருந்து இந்தியா வரும் விமானங்கள் சேவையை மீண்டும் தொடங்கியுள்ளன.

லண்டனில் இருந்து 256 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இன்று டெல்லி வந்து சேர்ந்தது. இந்த விமானத்தில் வந்த அனைத்து பயணிகளுமே கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்துகொண்டு தனிமைப்படுத்தப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாட்டிவிடப் பார்த்த வாரிசு நடிகையை அதிர வைத்த பிரபல நடிகர்
ஜனவரி 23ஆம் தேதி வரை இங்கிலாந்து - இந்தியா இடையே ஒவ்வொரு வாரமும் 30 விமானங்கள் மட்டுமே இயங்க அனுமதிக்கப்படும் என மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி