ஆப்நகரம்

அமெரிக்காவில் இந்தியரின் வீடு புகுந்து 4 பேர் சுட்டுக் கொலை

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும் அந்நாட்டு போலீசாரைத் தொடர்புகொண்டு குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 1 May 2019, 3:36 pm
அமெரிக்காவில் சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உள்பட 4 பேர் அவர்களது வீட்டிலேயே சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
Samayam Tamil get-some-guns_dc8c02c6-6b72-11e9-9975-c8a46a094be1


அமெரிக்காவின் ஒகியோ மாகாணத்தில் வெஸ்ட் செஸ்டர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஹக்கிகத் சிங் பனாக் என்ற சீக்கியரின் குடும்பம் வசித்து வந்திருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு அந்த வீட்டில் புகுந்த அடையாளம் தெரியா நபர், வீட்டில் இருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.

இதில், ஹக்கிகத் சிங் பனாக் (59), அவரது மனைவி பரம்ஜித் கவுர் (62), அவர்களின் மகள் ஷாலிந்தர் கவுர் (39) மற்றும் ஹக்கிகத் சிங் பனாக்கின் மைத்துனி அமர்ஜித் கவுர் (58) ஆகிய நான்கு பேரும் உயிரிழந்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடந்தபோது குழந்தைகள் வீட்டில் இல்லாததால் உயிர்தப்பியுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும் அந்நாட்டு போலீசாரைத் தொடர்புகொண்டு குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

அப்பாவி உயிர்களைப் பறித்த இந்தத் தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது என இதுவரை அறியப்படவில்லை.


இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், இது இனவெறி தாக்குதலாக இருக்காது என நம்புவதாகவும், கொல்லப்பட்டவர்களில் ஒருவர் இந்தியாவில் வசிப்பவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி