ஆப்நகரம்

கமலா சர்ச்சை புகைப்படம்: மன்னிப்பு கேட்க வலியுறுத்தும் இந்து அமைப்புகள்!

கமலா ஹாரிஸின் சர்ச்சைக்குரிய புகைப்படம் தொடர்பாக அவரது உறவினர் மன்னிப்பு கோர வேண்டும் என்று அமெரிக்க இந்து அமைப்பு வலியுறுத்தியுள்ளது

Samayam Tamil 26 Oct 2020, 7:01 pm
அமெரிக்க அதிபராக இருக்கும் டொனால்ட் ட்ரம்ப்பின் பதவிக்காலம் வருகிற நவம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. இதையொட்டி, அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ரிபப்ளிகன் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து டெமாக்ட்ரடிக் கட்சி வேட்பாளராக முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் களம் காண்கிறார். டெமாக்ட்ரடிக் கட்சி துணை அதிபராக சென்னையை சேர்ந்த இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.
Samayam Tamil கமலா ஹாரிஸ்
கமலா ஹாரிஸ்


இதனிடையே, துர்க்கையின் ஒன்பது அவதாரங்களையும் பூஜித்து இந்துக்களால் கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகை அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் வாழும் இந்துக்களால் கொண்டாடப்பட்டது. இப்பண்டிகையையொட்டி, ஜோ பைடன், கமலா ஹாரிஸ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், கமலா ஹாரிஸின் உறவினரான மீனா ஹாரிஸ் என்பவர் கமலா ஹாரிஸை துர்க்கையாக சித்தரிக்கும் புகைப்படம் ஒன்றை நவராத்திரி பண்டிகையையொட்டி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில், கமலா ஹாரிஸ் துர்க்கை போன்று சித்தரிக்கப்பட்டு, மகிசாசுரனாக சித்தரிக்கப்பட்டிருந்த ட்ரம்ப்பை கொல்லும் பொருட்டு அமைந்திருந்தது. துர்க்கையின் வாகனமான சிங்கம் போன்று ஜோ பைடன் சித்தரிக்கப்பட்டிருந்தார்.

அமெரிக்காவில் களைகட்டும் நவராத்திரி விழா: ஜோ பைடன், கமலா ஹாரிஸ் வாழ்த்து

இந்த புகைப்படம் வைரலானதையடுத்து, அமெரிக்க இந்துக்கள் சமூகம் இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது. ஏற்கனவே, வர்த்தக ரீதியிலான பயன்பாட்டுக்கு மதத்தை எப்படி பயன்படுத்தலாம் என்ற வழிகாட்டுதல்களை இந்து அமெரிக்க அறக்கட்டளை (Hindu American Foundation) வெளியிட்டுள்ள நிலையில், மீனா ஹாரிஸ் பகிருந்திருந்த அந்த புகைப்படம் உலகெங்கிலும் உள்ள இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அந்த அமைப்பை சேர்ந்த சுஹாக் சுக்லா தெரிவித்துள்ளார்.

மீனா ஹாரிஸ் பகிர்ந்த புகைப்படம்


இதுகுறித்து இந்து அமெரிக்க அரசியல் நடவடிக்கைக் குழுவின் ரிஷி கூறுகையில், சர்ச்சைக்குரிய அந்த புகைப்படத்தை மீனா ஹாரிஸ் உருவாக்கவில்லை. அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிரும் முன்னரே சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது. ஜோ பைடன் பிரசார குழுவினரும் அந்த புகைப்படத்தை உருவாக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். தற்போது அந்த புகைப்படத்தை மீனா ஹாரிஸ் நீக்கி விட்டாலும் அவர் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி