ஆப்நகரம்

துபாய் மன்னரை அசத்திய இந்திய வம்சாவளி இளைஞர்: கின்னஸ் சாதனை!

துபாய் மன்னருக்காக கிரீட்டிங் கார்ட் ஒன்றை உருவாக்கிய இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்

Samayam Tamil 3 Jan 2021, 8:20 pm
ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமரும், துபாய் மன்னருமான ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்டூம்மின் 15ஆவது பதவியேற்பு நாளையொட்டி, ராம்குமார் சாரங்கபாணி என்பவர் மெகா சைஸில் கிரீட்டிங் கார்ட் ஒன்றை உருவாக்கியுள்ளார். ஓவியர் அக்பர் ஷாகீப் உருவாக்கிய துபாய் மன்னரது ஓவியங்களை உள்ளடக்கிய அந்த கிரீட்டிங் கார்டு சாதாரண கிரீட்டிங் கார்டுகளை விட 100 மடங்கு பெரியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil கிரீட்டிங் கார்டு
கிரீட்டிங் கார்டு


கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ள அந்த கிரீட்டிங் கார்டின் மேற்பரப்பு 8.20 சதுர மீட்டரை கொண்டதாக இருக்கிறது. ஹாங்காங்கில் அமைக்கப்பட்ட 6.729 சதுர மீட்டர் என்ற முந்தைய சாதனையை இது முறியடித்துள்ளது.

ராம்குமார் சாரங்கபாணியின் கிரீட்டிங் கார்டு 4 மீட்டர் நீளமும், 2.05 மீட்டர் அகலமும் கொண்டதாக உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய நாளை முன்னிட்டு துபாயில் உள்ள தோகா மையத்தில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ள அந்த கிரீட்டிங் கார்டு வருகிற 18ஆம் தேதி வரை அங்கு காட்சிக்காக வைக்கபப்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

NRI நபர்களுக்கான புதிய ஆப் அறிமுகம்: இதில் என்ன ஸ்பெஷல்?

இதுகுறித்து ராம்குமார் சங்கரபாணி கூறுகையில், கடந்த 6 மாதங்களாக இதனை உருவாக்கியதாகவும், இந்த தருணத்துக்காக காத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தின் உருவாக்க நாளுக்காக இதனை தான் அர்பணிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னையை சேர்ந்த ராம்குமார் சாரங்கபாணி என்பவர் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்னர் ஐக்கிய அரபு நாடான துபாயில் குடியேறியவர். துபாய் மற்றும் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான தனிநபர் உலக சாதனைகளை படைத்தவர் என்று கல்ஃப் நியூஸ் குறிப்பிட்டுள்ளது.

அடுத்த செய்தி