ஆப்நகரம்

இந்தியரை இரும்புக் கம்பியால் தாக்கி கொள்ளையடித்த பாகிஸ்தானியர்கள்!

இந்தியரை இரும்புக் கம்பியால் தாக்கி மொபைல் போன், கிரெடிட் கார்டுகள், ரொக்கப் பணம் உள்ளிட்ட பொருட்களை திருடிச்சென்ற பாகிஸ்தானியர்கள்.

Samayam Tamil 24 Nov 2020, 5:28 pm

துபாயில் 33 வயது இந்தியரை மூன்று பாகிஸ்தானி திருடர்கள் கடுமையாக தாக்கி லேப்டாப், மொபைல் போன், ரொக்கப் பணம் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.
Samayam Tamil Representational Image


இதுகுறித்து துபாய் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, பாதிக்கப்பட்ட நபர் பேசுகையில், புர் துபாய் பகுதியில் உள்ள வில்லாவில் அத்துமீறி புகுந்த பாகிஸ்தானி திருடர்கள், தங்கியிருந்த நபர்களை இரும்புக் கம்பியால் தாக்கியதாக தெரிவித்துள்ளார்.

மேலும், தனது முகத்தை பிளாஸ்டிக் பையால் மூடி, வாய்க்கு டேப் போடப்பட்டு தாக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்திய திருடர்கள் மாஸ்க் அணிந்திருந்ததாகவும், அதில் ஒருவரது மாஸ்கை இழுத்து முகத்தை பார்த்துவிட்டதாகவும் பாதிக்கப்பட்ட இந்தியர் தெரிவித்துள்ளார்.

இவரையும் விட்டுவைக்காத கொரோனா; காந்தியின் கொள்ளுப்பேரனுக்கு நேர்ந்த சோகம்!

தன்னிடம் இருந்த லேப்டாப், மொபைல் போன், கிரெடிட் கார்டுகள், ரொக்கப் பணம் உள்ளிட்ட பொருட்களையும் திருடர்கள் திருடிச்சென்றுவிட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இரு திருடர்களில் முகம் கண்டறியப்பட்ட நபர் மட்டும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மீதம் இரு திருடர்களும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

கைது செய்யப்பட்ட திருடர் 25 வயது பாகிஸ்தானி ஆவர். அவர் மீது திருட்டு மற்றும் உடல்ரீதியாக தாக்குதல் நடத்தியது ஆகிய குற்றங்களின் கீழ் துபாய் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பர் 9 அன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி