ஆப்நகரம்

இந்திய வம்சாவளி கவிஞருக்கு இங்கிலாந்தின் மிக உயரிய விருது!

இங்கிலாந்தின் மின உயரிய இலக்கிய விருதுக்கான போட்டியாளர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பானு கபில் பெயர் இடம்பெற்றுள்ளது.

Samayam Tamil 16 Oct 2020, 5:14 pm

20ஆம் நூற்றாண்டை சேர்ந்த அமெரிக்க-பிரிட்டிஷ் கவிஞர் டி.எஸ்.எலியட். இவரது பெயரில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கவிஞர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில், இந்தாண்டுக்கான டி.எஸ்.எலியட் பரிசு வழங்க 10 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், இந்திய வம்சாவளியை சேர்ந்த கவிஞர் பானு கபில் பெயரும் இடம்பெற்றுள்ளது.
Samayam Tamil பானு கபில்


பானு கபில் இங்கிலாந்தில் பிறந்தவர். இவர் எழுதிய ‘How to wash a heart' என்ற கவிதை தொகுப்பில், புலம்பெயர்ந்த விருந்தினர் ஒருவருக்கும், அந்நாட்டு குடியுரிமை பெற்ற ஒருவருக்கும் இடையேயான உறவு குறித்து வர்ணிக்கப்பட்டிருக்கும்.

NRI அந்தஸ்து: இதென்னடா புதிய தலைவலி!

அமெரிக்கா, இங்கிலாந்து இரண்டு நாடுகளிலுமே பானு கபில் மாறி மாறி வசித்துள்ளார். கொலொராடோவில் நரோபா பல்கலைக்கழகத்தில் 21 ஆண்டுகளை கழித்தார் பானு. இவர் The Vertical Interrogation of strangers, Schizophrene, Ban en Banlieue உள்ளிட்ட ஆறு புத்தகங்களை எழுதியுள்ளார்.

பானு கபிலுக்கு இந்தாண்டு அமெரிக்காவில் விந்தம் கேம்பெல் பரிசு வழங்கப்பட்டது. How to wash a heart புத்தகம் கடந்த ஆண்டு இங்கிலாந்தில் வெளியிடப்பட்டது. விசாரணையையே கவிதை வடிவில் மேற்கொள்ளும் வகையில் இப்புத்தகம் இருப்பதாக பாராட்டுகளை பெற்றுள்ளது.

இங்கிலாந்து இலக்கியத் துறையில் மிகவும் மதிப்பு மிக்க விருதாம டி.எஸ்.எலியட் பரிசு கருதப்படுகிறது. இந்த விருதை யாருக்கு வழங்குவது என மிக புகழ்பெற்ற கவிஞர்களே தேர்வு செய்வார்கள். வெற்றிபெறும் கவிஞருக்கு 25,000 பவுண்டுகள் வழங்கப்படும். இதன் இந்திய ரூபாய் மதிப்பு 23.5 லட்சம் ரூபாய்க்கும் மேல் அதிகம்.

அடுத்த செய்தி