ஆப்நகரம்

இவரையும் விட்டுவைக்காத கொரோனா; காந்தியின் கொள்ளுப்பேரனுக்கு நேர்ந்த சோகம்!

மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் சதீஷ் துபேலியா கொரோனா பாதிப்பால் பலியானார்.

Samayam Tamil 23 Nov 2020, 3:02 pm
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மிக முக்கிய பங்காற்றியவர் மகாத்மா காந்தி. தேசத்தந்தை என்று இந்திய மக்களால் அன்போடு அழைக்கப்பட்டவர். இளம் வயதில் தென் ஆப்ரிக்காவில் வழக்கறிஞர் பணியில் ஈடுபட்டார். இவரது இளைய மகன் மணிலால் காந்தி. இவருக்கு உமா துபேலியா, சதீஷ் துபேலியா, கீர்த்தி மேனன் என மூன்று பேரப் பிள்ளைகள். தென் ஆப்ரிக்காவில் மகாத்மா காந்தி விட்டுவந்த பணிகளை இந்த மூவரும் தான் கவனித்து வந்தனர். இந்நிலையில் சதீஷ் துபேலியாவிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் நிமோனியா பிரச்சினையும் இருந்துள்ளது. ஒருமாத காலமாக மிகவும் சிரமப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Samayam Tamil Satish Dhupelia


அதுவும் தனது 66வது பிறந்த நாள் நிறைவு பெற்ற மூன்றாவது நாளிலேயே உயிர் துறந்துள்ளார். இந்த துயர நிகழ்வை அவரது சகோதரி உமா துபேலியா தனது சமூக வலைதளப் பக்கம் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதில், எனது அன்புக்குரிய சகோதரன் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் ஞாயிறு மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

100 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட சிலை மீண்டும் இந்தியாவுக்கு பயணம்!

சதீஷ் துபேலியா ஊடகப் பணியாற்றி வந்துள்ளார். வீடியோ மற்றும் போட்டோகிராபராக வேலை செய்து வந்திருக்கிறார். மேலும் டர்பனில் உள்ள ஃபீனிக்ஸ் செட்டில்மெண்ட்டில் மகாத்மா காந்தி தொடங்கி வைத்த காந்தி மேம்பாட்டு ட்ரஸ்ட் பணிகளையும் கவனித்து வந்தார்.

அனைத்து சமூக மக்களுடனும் நன்றாக பழகக் கூடியவர். பல்வேறு சமூக நல அமைப்புகளில் உறுப்பினராக இருந்து சேவையாற்றியுள்ளார். இவரது மறைவு பேரிழப்பு என்று தென் ஆப்ரிக்க அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி