ஆப்நகரம்

சிங்கப்பூர் மாரியம்மன் கோயிலில் மோசடி.. பூசாரி கைது!

சிங்கப்பூர் மாரியம்மன் கோயிலில் பூசாரி செய்த மோசடி அம்பலம். கைது செய்யப்பட்டு வழக்குப் பதிவு.

Samayam Tamil 18 Feb 2021, 10:19 pm
சிங்கப்பூரில் உள்ள பழைமையான மாரியம்மன் கோயிலின் முன்னாள் பூசாரி கந்தசாமி சேனாபதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோயிலின் தங்க நகைகளை தொடர்ந்து அடகு வைத்து பணம் பெற்றுள்ளதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
Samayam Tamil Kandasamy Senapathi


இதுவரை 15 லட்சம் டாலருக்கு அவர் கோயில் நகைகளை அடகு வைத்து பணம் ஈட்டியுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். கந்தசாமி போதிய அளவுக்கு பணம் ஈட்டியபிறகு நகையை மீட்டு கோயிலில் வைத்துவிடுவதாக கூறப்படுகிறது.

இனவெறி சர்ச்சை: முதல் இந்தியப் பெண் ராஷ்மி சமந்த் ராஜினாமா!
எனினும், கொரோனா காலகட்டத்தில் அவரால் போதிய பணம் ஈட்ட முடியவில்லை. இதனால் நகையை மீட்கமுடியாமல் சிக்கிக்கொண்டார். 194 ஆண்டுகள் பழைமையான சிங்கப்பூர் மாரியம்மன் கோயில் உள்ளூர் மக்களையும், சுற்றுலா பயணிகளையும் வெகுவாக ஈர்த்து வருகிறது.

இந்நிலையில், கோயிலில் பூசாரியாக வேலை செய்த கந்தசாமி நகை அடகு வைக்கும் பிரச்சினையில் சிக்கிக்கொண்டது சிங்கை வாழ் தமிழர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

H-1B Visa.. எல்லாம் ரெடி? யாருக்கெல்லாம் விசா கிடைக்கும்?
2016ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை கோயிலின் தலைமை பூசாரியாக பொறுப்பு வகித்துள்ளார் கந்தசாமி சேனாபதி. இந்த காலகட்டத்தில் அவர் ஐந்து முறை கோயில் நகைகளை அடகு வைத்து பணம் பெற்றது தெரியவந்துள்ளது.

கோயில் நகைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது கந்தசாமி வசமாக சிக்கிக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பூசாரி பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. அவர் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளின் படி சிறைத்தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி