ஆப்நகரம்

ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட தமிழ் பெண்: 8 ஆண்டுகளாக நடந்த துயரம்!

ஆஸ்திரேலிய நாட்டின் வேலைக்கு சென்ற தமிழ் பெண் அடிமையாக நடத்தப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது

Samayam Tamil 12 Feb 2021, 4:52 pm
தமிழகத்தை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2007ஆம் ஆண்டு சுற்றுலா விசா மூலம் ஆஸ்திரேலியா நாட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அந்நாட்டை சேர்ந்த தம்பதி ஒருவரது மூன்று குழந்தைகளை பராமரித்துக் கொள்ளவும், அவர்களின் வீட்டு வேலைகளை செய்யும் பணி கிடைத்துள்ளது. தொடர்ந்து அங்கு தங்கியிருந்து பணிகளை மேற்கொண்டு வந்த அப்பெண்ணை அக்குடும்பத்தினர் முதலில் நன்றாக நடத்தியுள்ளனர்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


அதன் பின்னர், அப்பெண்ணை அடிமை போன்று அவர்கள் நடத்தியதாக தெரிகிறது. யாருடனும் பேசக் கூடாது என்று சொல்லி கொடுமைப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. கழிவுகள் கிடந்த ஒரு அறையில் அடிமை போன்று அப்பெண் கிடந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த தகவலின் பேரில் அப்பெண்ணை ஆஸ்திரேலிய போலீசார் மீட்டுள்ளனர். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுமார் 60 வயது மதிக்கத்தக்க அப்பெண் நீரழிவு நோயால் பாதிக்கபப்ட்டுள்ளதாகவும், 2015ஆம் ஆண்டு வரை அப்பெண் அடிமை போன்று நடத்தப்பட்டதாகவும் உள்ளூர் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த 10ஆம் தேதி நீதிமன்றத்தில் நடைபெற்றுள்ளது. கொரோனா தொற்று காரணமாக ஆஸ்திரேலிய அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ள அந்த வழக்கானது ஊடக வெளிச்சம் பெற்றுள்ளது.

இங்க மட்டும் வந்துடாதிங்க.. அரபு வாழ் தமிழர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

அதேசமயம், இந்த குற்றச்சாட்டுகளை ஆஸ்திரேலிய நாட்டு தம்பதி மறுத்துள்ளது. அப்பெண்ணை தாங்கள் நன்றாக நடத்தியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், வழக்கு விசாரணையின் போது அப்பெண் எப்படி மீட்கப்பட்டார் என்பன உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் தெரியவரும். பாதுகாப்பு காரணங்களுக்காக அப்பெண்ணின் புகைப்படம், பெயர் உள்ளிட்ட விவரங்களும், அந்த தம்பதியினரின் விவரங்களும் வெளியிடப்படவில்லை.

அடுத்த செய்தி