ஆப்நகரம்

புதுவையில் 10 பேருக்கு இன்ஃபுளுயன்சா; 7 பேருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி !

புதுச்சேரியில் வைரஸ் காய்ச்சல் அதிகமாக பரவி வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு சுமார் 500 பேர் வீதம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் புதுச்சேரியில் 7 பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் இரண்டு பேர் ஜிப்மர் மருத்துவமனையிலும், 5 பேர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு தெரிவித்தார். மேலும் இன்ஃபுளுயன்சா என்ற குளிர் காய்ச்சல் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Curated byDhivya Thangaraj | Samayam Tamil 24 Sep 2022, 6:48 pm

ஹைலைட்ஸ்:

  • புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 10 நபர்களுக்கு இன்ஃபுளுயன்சா
  • பாதிக்கப்பட்ட நபர்களில் 7 நபர்களுக்கு தற்போது பன்றி காய்ச்சல்
  • முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பரிசோதனைகளை தீவிரம்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil fever
புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு நாள்தோறும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குழந்தைகளிடம் காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனையடுத்து காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.


இந்நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 10 நபர்களுக்கு (பெரியவர்கள்) இன்ஃபுளுயன்சா (influenza) என்ற குளிர் காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தனி வார்டு மற்றும் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இன்ஃப்ளுயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களில் 7 நபர்களுக்கு தற்போது பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 2 பேர் ஜிப்மரிலும், 5 பேர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜிப்மரில் Paracetamol கூட இல்லையா? தமிழிசை ஆய்வும் இயக்குனர் பதிலும்!

இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் பரவாமல் இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பரிசோதனைகளை தீவிர படுத்த சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதார துறை இயக்குனர் ஸ்ரீ ராமுலு தெரிவித்துள்ளார். தற்போது புதுச்சேரியில் வைரஸ் காய்ச்சல் குறைந்த வரும் நிலையில், பன்றிக் காய்ச்சல் தொற்று அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
Dhivya Thangaraj

அடுத்த செய்தி