ஆப்நகரம்

பாஜக ஆட்சி செய்யும் புதுச்சேரியில் பிள்ளையார் பிறந்தநாள் பாதுகாப்பாக கொண்டாடப்படுகிறது!

புதுச்சேரி மாநிலத்தில் அரசு அனுமதித்ததால் நூற்றுக்கணக்கான பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.

Samayam Tamil 10 Sep 2021, 5:09 pm
புதுச்சேரி மாநிலத்தில் வழக்கமான உற்சாகத்துடன் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இதற்கிடையே பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடலாம் என அரசு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளிடம் அனுமதி வழங்கியுள்ளது.
Samayam Tamil பாஜக ஆட்சி செய்யும் புதுச்சேரியில் பிள்ளையார் பிறந்தநாள் பாதுகாப்பாக கொண்டாடப்படுகிறது!


இதனையடுத்து புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சிலைகள் வைப்பது தொடர்பாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் வெளியிட்டுள்ளார், அதன்படி போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலையின் சந்திப்பில் விநாயகர் சிலைகள் வைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினரிடம் அனுமதி பெறாமல் பொது இடங்களில் சிலைகள் வைக்கக்கூடாது எனவும், அரசின் கொரோனா வழிகாட்டுதல்களை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.

ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கோலாகலம்!
பொது இடங்களில் சிலைகள் வைக்கும் குழுவினர் கட்டாயமாகத் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். பக்தர்கள் தனி மனித இடைவெளி உறுதி செய்ய வேண்டும், சிலை வைக்கப்பட்ட இடங்களில் 25க்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடக் கூடாது. இதேபோல் நிகழ்ச்சிகள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் முறையாகப் பின்பற்றப்படுகின்றதா என போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி