ஆப்நகரம்

இலவச மருத்துவ முகாம்; இதற்கெல்லாம் சிகிச்சை!

புதுச்சேரி கரிக்கலாம்பாக்கத்தில் உள்ள ராஜீவ்காந்தி சமுதாய நலக்கூடத்தில் அஷ்வினி பாலிகிளினிக் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு உடல் பரிசோதனை செய்துகொண்டனர்.

Samayam Tamil 31 Jul 2021, 2:28 pm
புதுச்சேரி அஷ்வினி பாலிகிளினிக் சார்பில் இலவச மருத்துவ முகாம் கரிக்கலாம்பாக்கத்தில் உள்ள ராஜீவ்காந்தி சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. இதில் கரிக்கலாம்பாக்கம் கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஜெகன்நாதன் தலைமை தாங்கி மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்.
Samayam Tamil இலவச மருத்துவ முகாம்
இலவச மருத்துவ முகாம்


திருமாவளவனுக்கு திமுகவில் மரியாதை இல்லை?; சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுக்கும் இப்ராஹிம்!

இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு முழு உடல் பரிசோதனை செய்து கொண்டனர். இந்த முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்ட நோய்கள் குறித்து பரிசோதனை செய்யப்பட்டது. இதில், கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் தலைவர் சேகர், குப்புசாமி, ஜெய்சங்கர் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் உடன் இருந்தனர்.

அடுத்த செய்தி