ஆப்நகரம்

முதல்வர்னா இப்படிதான் இருக்கணும்... நாராயணசாமியின் சூப்பர் செயல்!

புதுச்சேரியில் தொடர் கனமழை காரணமாகப் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் வேளாண்துறை அமைச்சர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

Samayam Tamil 15 Jan 2021, 5:10 pm
மேலடுக்கு சுழற்சி காரணமாகப் புதுச்சேரியில் கடந்த 5 நாட்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் விளை நிலங்கள் நீரில் மூழ்கி பயிர்கள் முற்றிலுமாக சேதமடைந்து காணப்படுகின்றன.
Samayam Tamil முதல்வர்னா இப்படிதான் இருக்கணும்... நாராயணசாமியின் சூப்பர் செயல்!
முதல்வர்னா இப்படிதான் இருக்கணும்... நாராயணசாமியின் சூப்பர் செயல்!


இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து மத்தியக்குழு ஏற்கனவே பார்வையிட்டுக் கணக்கெடுப்பு நடத்திவிட்டுச் சென்றது. இதையடுத்து தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கணக்கெடுப்பு செய்து பயிர் சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனப் புதுச்சேரி அரசை விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் மண்ணாடி பட்டு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளான கொடாத்தூர் கிராமத்தில் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை முதல்வர் நாராயணசாமி, வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் மற்றும் அதிகாரிகள், வெள்ளத்தில் மூழ்கி வீணான நெற்பயிர்களை நேரில் சென்று வயலில் இறங்கிப் பார்வையிட்டனர்.

இதே போன்று பல்வேறு கிராமங்களுக்குச் சென்று பயிர் சேதங்களைப் பார்வையிட்ட முதல்வர் நாராயணசாமியிடம் விவசாயிகள், “பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தார்கள்.

பொய் செய்தி ஊடகங்களுக்கு: முதல்வர் சொன்ன பதில் இதுதான்!

இதனைத்தொடர்ந்து பாதிப்பு குறித்து அதிகாரிகள் கணக்கெடுப்பு செய்தபின்பு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நாராயணசாமி உறுதியளித்தார்.

அடுத்த செய்தி