ஆப்நகரம்

தொடர்ந்து உயரும் கொரோனா மரணம்… மீண்டும் ஊரடங்கா?

புதுச்சேரியில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 31 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 50 பேர் உயிரிழந்தனர்.

Samayam Tamil 2 Feb 2022, 5:03 pm
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில், நேற்று 3633 பேரிடம் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 742 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil Puducherry corona Update


புதுவையில் கொரோனா பரவல் குறைந்து வருவதாக அரசு தரப்பில் கூறப்பட்டாலுல், கடந்த ஜனவரி மாதம் மட்டும் 31,776 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதோடு, 50 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் கடந்த 2020 மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவல் துவங்கியது. நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டது. பின்னர், பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு, வழக்கமான பணிகள் நடந்தது. முதல் அலை ஒய்ந்த சில மாதங்களிலே 2021ம் ஆண்டு மத்தியில் கொரோனா 2வது அலை பரவத் துவங்கியது.

ஆக்ஸிஜன் படுக்கை கிடைக்காமல் ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு மே ஜூன் மாதங்களில், புதுச்சேரியில் தினசரி 30 பேர் வரை உயிரிழந்தனர். கொரோனா தடுப்பூசி பணி விரைவுப்படுத்தப்பட்ட பின்பு, கொரோனா சற்று குறைந்தது. அதற்குள் கடந்த ஆண்டு இறுதியில் ஒமைக்ரான் தொற்று பரவல் நாடு முழுவதும் துவங்கியது.

இதனால் புதுச்சேரியிலும் குறைந்திருந்த கொரோனா பரவல் கடந்த ஜனவரி முதல் வாரத்தில் கிடுகிடுவென உயர துவங்கியது.கடந்த நவம்பர் மாதம் புதுச்சேரி, காரைக்கால், மாகி ஏனாம் பகுதியில் 876 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டனர்.

டிசம்பரம் மாதம் இந்த பாதிப்பு எண்ணிக்கை குறைந்து, 580 ஆக பதிவாகி இருந்தது. ஆனால், ஜனவரி மாதம் முதல் தேதியில் இருந்து கொரோனா கொற்று உயர துவங்கியது. அசுர வேகத்தில் பரவிய தொற்றால், புதுச்சேரி முழுவதும் மக்கள் காய்ச்சல், ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டனர். பாதிக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளாமல், வீட்டிலே சுய மருத்துவம் எடுத்து கொண்டனர்.
பட்ஜெட் பரிதாபங்கள்; அல்வா கொடுத்த ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்!

காய்ச்சல், சளி ஏற்பட்டவர்களில் பாதிக்கும் குறைவானவர்களே, மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொண்டனர். அதன்படி, கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் நேற்று 31ம் தேதி புதுச்சேரியில் ஒரே மாதத்தில் 31,776 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுபோல், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் கடந்த மாதம் உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 50 பேர் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இன்று ஒரே நாளில் 6 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி