ஆப்நகரம்

குறையும் கொரோனா; அதிகரிக்கும் மரணம்… குழப்பத்தில் சுகாதார ஊழியர்கள்!

புதுச்சேரியில் ஒரே நாளில் 1,130 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Samayam Tamil 24 Jan 2022, 6:21 pm
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடந்த 2,585 பேரிடம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், புதுச்சேரியில் 906 பேர், காரைக்காலில் 167 பேர், ஏனாமில் 140 பேரும், மாஹேவில் 13 பேர் என மொத்தம் 1,130 நபர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil puducherry corona cases


இதனால், புதுவையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 15,652-ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் இதுவரை 1,53,343 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் 1,35,783 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். சிகிச்சை பலனின்றி மேலும் இருவர் உயிரிழந்ததால் கொரோனா பலி எண்ணிக்கை ஆயிரத்து 908-ஆக அதிகரித்துள்ளது.

புதுவையை பொறுத்தவரை கடந்த வாரம் இரட்டிப்பாக இருந்த கொரோனா பாதிப்பு, சற்று குறைந்து வருகிறது. ஆனாலும், நாள்தோறும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சுகாதாரத்துறை ஊழியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.ஆனாலும், பலியாவோரில் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்தாதவர்கள் என தெரியவந்துள்ளது.
மசாஜ் சென்டரில் அழகிகளை வைத்து விபச்சாரம்… நகராட்சி அதிகாரிகள் செய்தது என்ன?

இதனிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக முதல் தவணை தடுப்பூசியை 9,17,394 பேர், இரண்டாம் தவணையை 5,99,328 பேர் மற்றும் பூஸ்டர் தடுப்பூசியை 5,281 பேர் என மொத்தமாக 15,22,003 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளதாக புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி