ஆப்நகரம்

மாஜி பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினம் - புதுச்சேரி முதலமைச்சர் அவரது திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது திருஉருவ சிலைக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Curated byM.முகமது கெளஸ் | Samayam Tamil 21 May 2023, 4:44 pm

ஹைலைட்ஸ்:

  • இன்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு
  • புதுச்சேரியில் ராஜீவ் காந்தி திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதலமைச்சர் ரங்கசாமி
  • அவருடன் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் ஏராளமானோர் பங்கேற்று உறுதிமொழி ஏற்பு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Puducherry Rajiv Gandhi memorial day
உன்னால் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பல்வேறு அரசியல் கட்சியினர் ராஜீவ் காந்தியின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று புதுச்சேரியில் அரசு சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி ராஜீவ் காந்தி சதுக்கத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அன்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அவருடன் அமைச்சர் லட்சுமி நாராயணன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ. கே. டி. ஆறுமுகம் பாஸ்கர் ஆகியோரும் இருந்தனர். அவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதன் பின்னர் வன்முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் ரங்கசாமி உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆகியோரும் உறுதிமொழி ஏற்றனர்.



அதன் பின்னர் மும்மத பிரார்த்தனை இசைக்கப்பட்டது. அதைப்போலவே முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியம் மற்றும் முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் அரசு கொறடா ஆனந்த ராமன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆகியோர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ராஜீவ் காந்தியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நெல்லை திமுகவில் இவருக்கு பதில் இவர்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பின் காரணம் உட்கட்சி பூசலா.? பரபரப்பு தகவல்கள் இதோ..

தொடர்ந்து ராஜீவ் காந்தி ஜோதியுடன் ஊர்வலமாக வந்து ராஜீவ் காந்தியின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றனர். அதனைத் தொடர்ந்து மாணவர் காங்கிரசார் உட்பட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் ராஜீவ் காந்தி ஜாேதியுடன் ஸ்ரீபெரம்புத்தூர் சென்றனர்.
எழுத்தாளர் பற்றி
M.முகமது கெளஸ்
நான் முகமது கெளஸ். ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டமும் ஊடகவியல் துறையில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளேன். டிஜிட்டல் ஊடகத்தில் எனக்கு இரண்டு ஆண்டுகள் அனுபவம் உள்ளது. க்ரைம் சார்ந்த செய்திகள் எழுதுவதில் முழு ஈடுபாடு காட்டும் ஆர்வம் உண்டு. தற்போது டிஜிட்டல் ஊடகமான டைம்ஸ் ஆப் இந்தியா, சமயம் தமிழில் மாவட்ட செய்திகள் பிரிவில் பணிபுரிந்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி