ஆப்நகரம்

இன்றைய கொரோனா பாதிப்பு விபரம்; சிகிச்சை பலனின்றி இத்தனை பேர் பலி!

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 100 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர்.

Samayam Tamil 31 Jul 2021, 2:18 pm
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 67 நபர்களுக்கும், காரைக்காலில் 20 நபர்களுக்கும், ஏனாமில் ஒருவர், மாஹேவில் 12 நபர்களுக்கும் என மொத்தம் 100 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Samayam Tamil கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்


மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 1795 பேர் ஆகும். தற்போது மாநிலத்தில் 962 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கண் திறந்து பார்த்த அம்மன்?; செல்பிக்கு திரளும் பக்தர்கள்!

மேலும் மாநிலத்தில் இதுவரை 1,18,158 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1,20,915 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்து உள்ளது.

அடுத்த செய்தி