ஆப்நகரம்

Breaking News: குவாட்டர் வாங்கினால் சிக்கன் 65 ஃபிரி, புத்தாண்டு அதிரடி!

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட தடை எதுவும் இல்லை என அறிவிக்கப்பட்ட நிலையில் சரக்கு விற்பனை அமோகமாக நடைப்பெற்று வருகிறது.

Samayam Tamil 30 Dec 2021, 2:56 pm
புதுச்சேரியில் புத்தாண்டை ஒட்டி ஒரு குவாட்டர் சரக்கு வாங்கினால் சிக்கன் 65 இலவசம் என்று அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதனால் குறிப்பிட்ட கடையில் மது வாங்க குடிமகன்கள் மகிழ்ச்சியோடு அதிகாலை முதலே குவிந்தனர்.

புதுச்சேரி மாநிலத்தில் புத்தாண்டு பிறப்பை ஒட்டி பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் ஒருப் பகுதியாக புதுச்சேரி மாநிலத்தில் மதுப் பிரியர்களை குஷிப்படுத்தும் வகையில் தவளக்குப்பம் பகுதியில் இயங்கி வரும் தனியார் மதுபான கடை அதிரடி ஆஃபர் ஒன்றை வெளியிட்டிருந்தது.

அதாவது புத்தாண்டு பிறப்பை ஒட்டி சரக்கு ஒரு குவாட்டர் வாங்கினால் சிக்கன் 65 இலவசம் என அறிவிக்கபப்ட்டிருந்தது. அதன்படி இந்த ஆஃபர் விற்பனையும் தொடங்கியது.

புத்தாண்டு கொண்டாட்டம்: தனியார் ஹோட்டல்களில் மதுபானம் விற்க அனுமதி!
மேலும் குறிப்பிட்ட இந்த மதுபான கடையில் இந்த சிக்கன் 65 ஆஃபர் இன்றும் நாளையும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அறிந்த மது பிரியர்கள் தவளக்குப்பன் பகுதியில் உள்ள மதுபான கடை வாசலில் அதிகாலை முதலே குவிந்து கிடக்கின்றனர். இவர்கள் கடை திறந்ததை தொடர்ந்து குவாட்டர் வாங்கி அதற்கு இனாமாக சிக்கன் 65ஐ பெற்று உற்சாகத்துடன் குடித்து போதையை ஏற்றி வருகின்றனர்.

அடுத்த செய்தி