ஆப்நகரம்

puducherry: கவிழ்ந்தது ஆட்சி... அமைச்சரவையை ராஜினாமா செய்தார் முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரியில் அமைச்சரவையை ராஜினாமா செய்து துணைநிலை ஆளுநரிடம் முதலமைச்சர் நாராயணசாமி கடிதம் அளித்தார்.

Samayam Tamil 22 Feb 2021, 12:38 pm
புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையை இழந்ததாக பேரவையில் சபாநாயகர் அறிவித்தார். அமைச்சரவையை ராஜினாமா செய்து துணைநிலை ஆளுநரிடம் முதலமைச்சர் நாராயணசாமி கடிதம் அளித்தார்.
Samayam Tamil narayanasamy


புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து அடுத்தடுத்து எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில், நாராயணசாமி தலைமையிலான அரசு தனது மெஜாரிட்டியை நிரூபிக்கும்படி ஆளுநர் உத்தரவிட்டார். இதற்காக இன்று புதுச்சேரி சட்டசபை சிறப்புக் கூட்டம் தொடங்கியது.

இக்கூட்டத்தில் அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்து முதலமைச்சர் நாராயணசாமி பேசினார். அப்போது அப்போது, புதுச்சேரியில் காங்கிரஸ் அரசுக்கு பெரும்பான்மை உள்ளது என்றும், ஆட்சியை கவிழ்க்க சதி செய்வதாகவும் கூறினார். முந்தைய ஆளுநர் கிரண்பேடி மூலம் அரசுக்கு தொல்லை கொடுக்கப்பட்டதாகவும், நெருக்கடியை கடந்தும் ஆட்சியை நிறைவு செய்ததாகவும் கூறினார்.

வெட்டி சாய்க்கப்பட்ட திமுக நிர்வாகி... நெல்லையில் பதற்றம்!

தொடர்ந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்குத்தான் வாக்களிக்கும் உரிமை உண்டு என்ற கருத்தை சபாநாயகர் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் சட்டப்பேரவையில் இருந்து முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், காங்கிரஸ், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தோல்வி அடைந்தது. இதையடுத்து அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.

கருணாஸ் சின்னம்மா ஆதரவாளர் தான்: முக்குலத்தோர் புலிப்படை அஜய்

இதையடுத்து முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து அமைச்சரவையை ராஜினாமா செய்து கடிதம் அளித்தனர்.

புதுச்சேரி சட்டசபையில் காங்கிரஸ் கூட்டணியின் பலம் 12 ஆகவும், எதிர்க்கட்சிகளின் பலம் நியமன உறுப்பினர்களையும் சேர்த்து 14 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி