ஆப்நகரம்

ஹேப்பி நியூஸ்: தற்காலிக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு: மாநில அரசு நச் அறிவிப்பு

புதுச்சேரியில் தற்காலிக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.

Samayam Tamil 26 Oct 2021, 2:28 pm
அகில இந்திய என்ஆர் காங்கிரஸ் நிறுவனர் என்.ரங்கசாமி நான்காவது முறையாக புதுச்சேரி முதல்வராக கடந்த மே 7ஆம் தேதி பதவியேற்றார். இவர் முதல்வர் ஆன நாளிலிருந்து மக்களோடு மக்களாக பழகி வருவதால் அவரது ஆதரவாளர்களால் மக்கள் முதல்வர் என்று அழைக்கப்பட்டு வருகிறார்.
Samayam Tamil representative image


மேலும், அண்டை மாநிலங்களில் உள்ளது போன்று இல்லாமல் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்ற ஒரு எளிய முறையை உருவாக்கி ரங்கசாமி நடைமுறைப்படுத்தி வருவதாவும் கூறப்படுகிறது.

இதற்கு மத்தியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரியில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்புடன் (PONLAIT) இணைக்கப்பட்டுள்ள தற்காலிக ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு உள்ளிட்ட தொழிலாளர்களுக்குப் பலனளிக்கும் நடவடிக்கைகளையும் அறிவித்தார். அதன்படி, புதுச்சேரியில் தற்காலிக அரசு ஊழியர்களுக்கான ஊதியம் ரூ.7,000 ஆயிரத்தில் இருந்து ரூ. 15 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

வீடுகளில் முடங்கிய மக்கள், மீண்டும் பரவும் கொரோனா: கடும் ஊரடங்கு அமல்..!

மேலும், நேரடி பலன் பரிமாற்றத்தின்படி, தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பட்டியலின உறுப்பினர்களின் வங்கிக் கணக்கிலும் தீபாவளியை முன்னிட்டு ரூ. 500 வரவு வைக்கப்படும் என்றும் முதல்வர் ரங்கசாமி கூறினார். பட்டியலினத்தை சார்ந்த குடும்பங்களில் உள்ள உறுப்பினர்களுக்கு தீபாவளி ஆடைகளுக்குப் பதிலாக இந்தத் தொகை கிடைக்கும்.

முன்னதாக , புதுச்சேரியில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உள்ள யூனியன் பிரதேசத்தில் உள்ள குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசியும், 2 கிலோ சர்க்கரையும் தீபாவளிக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி