ஆப்நகரம்

புதுவையில் அறிவிக்கப்படாத அவசரநிலை - நாராயணசாமி பகீர் குற்றச்சாட்டு

புதுச்சேரியில் அறிவிக்கப்படாத அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி துணை ராணுவப் படையை அழைத்துவந்துள்ள ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 3 Oct 2022, 1:56 pm
புதுச்சேரி எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ள தனது வீட்டில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “புதுச்சேரி மாநிலம் கடந்த சில தினங்களாக கலவர பூமியாக மாறியுள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு மின்துறையை தனியார்மயமாக்க டெண்டர் விட்டுள்ளதை கண்டித்து மின்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Samayam Tamil v narayanasamy
நாராயணசாமி, புதுச்சேரி முன்னாள் முதல்வர்


மின்துறை தனியார் மயத்தால் எந்த பலனும் புதுச்சேரிக்கு இல்லை.இந்தியாவில் மிகக் குறைந்த மின்சார கட்டணம் புதுச்சேரியில் தான் கொடுத்து வந்தோம். பாஜக ஆட்சிக்கு வந்தால் மக்களை துன்புறுத்துவார்கள்.தற்போது மின்துறை தனியார்மயம் விவகாரத்தில் பொதுமக்களையும், அரசியல் கட்சியினரையும் இதுவரை கருத்து கேட்காமல் தன்னிச்சையாக உத்தரவு போட்டுள்ளனர்.

புதுச்சேரியில் அறிவிக்கப்படாத அவசரநிலை பிரகடனம் நிலவி வருகிறது என்றும், துணைநிலை ஆளுநர் தற்போது புதுச்சேரியில் துணைராணுவத்தை இறக்கியுள்ளார் என்றும் முதலமைச்சருக்கு தெரியாமலே இந்த தனியார் மயம் உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறினார்.
ஆர்.எஸ்.எஸ் உடையில் அமைச்சர் பேரணி.. அதிர்ச்சியில் உறைந்த புதுவை மக்கள்!
தொடர்ந்து பேசிய அவர், மின்துறையை தனியாரிடம் விற்றுவிட்டதால் மகாரஷ்டிராவில் ஒரு யூனிட் 18 ரூபாய் விற்கும் அதே நிலை தன் இங்கு ஏற்படும் மக்கள் கட்டுவார்களா என கேள்வி எழுப்பினார். பாஜக ஆளும் மாநிலங்களில் ஏன் இதை மத்திய பாஜக அரசு கொண்டுவரவில்லை. அவர்கள் ஆளாத மாநிலங்களில் இதை புகுத்துகின்றனர்.

தமிழகத்தில் தனியார் மயம் கொண்டுவர முயன்றபோது அதனை திமுக ஸ்டாலின் எதிர்த்ததால் அந்த முடிவு நிறுத்தப்பட்டது. தனியார் மயமானாலும் தற்போது வழங்கப்படும் விலைக்கே கொடுக்கப்படும் என உத்திரவாதம் கொடுக்க முடியுமா. இதனை உறுதியாக நாங்கள் எதிர்ப்போம் என்றும், நீதிமன்றம் செல்ல கூட தயார் என கூறினார்.

மேலும், துணைநிலை ஆளுநருக்கு நாவடக்கம் தேவை என்றும், அவர் பாஜகவின் ஏஜெண்டாக செயல்பட்டு வருகிறார். புதுச்சேரி மாநிலத்தை பற்றி கவலை இல்லாத கூட்டணியாகவும், மக்களை வஞ்சிக்கும் கூட்டணியாக என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி உள்ளது என்றும், இந்த ஆட்சி குறைபிரசவம் ஆட்சியாக அமையும்" இவ்வாறு கூறினார்.

அடுத்த செய்தி