ஆப்நகரம்

புதுச்சேரியை உலுக்கிய தாய், மகள் கொலை வழக்கில் பெரும் திருப்பம்!

புதுச்சேரி அருகே தாய், மகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக நகைக்கு ஆசைப்பட்டு கொலை செய்ததாக இளநீர் வியாபாரியை போலீசார் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 5 Mar 2021, 8:33 am

ஹைலைட்ஸ்:

  • கொலை செய்து எடுத்த சென்ற நகையில் பாதி கவரிங் என்பது குறிப்பிடத்தக்கது...
  • சொத்து பிரச்சினை தொடர்பாகக் கொலை நடந்திருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம்..?
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil புதுச்சேரியை உலுக்கிய தாய், மகள் கொலை வழக்கில் பெரும் திருப்பம்!
புதுச்சேரி மாநிலம், நோணாங் குப்பத்தைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. கணவரை இழந்த இவருக்கு மகள்கள் ஜோதி, மாதங்கி என்கிற சந்தியா, மகன் வாழுமுனி, ஆகியோருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு தவளக்குப்பம் அடுத்த இடையார்பாளையம் அருகே உள்ள தனது வயலுக்குச் சென்ற, விஜயலட்சுமி, அவரது மகள் மாதங்கி(எ)சந்தியா ஆகிய இருவரும் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்ததில், சொத்து பிரச்சினை தொடர்பாகக் கொலை நடந்திருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து, விஜயலட்சுமியின் உறவினர்கள் 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். கொலையாளிகளைப் பிடிக்க, ஏடிஎஸ்பி பாண்டியன் மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இதனையடுத்து போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் இளநீர் வியாபாரி ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

சரக்கு கையிலிருந்தால் குண்டாஸ் சட்டம்: அரசு எச்சரிக்கை!

அப்போது அவர் நகைக்காக இருவரையும் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். விசாரணையில் நகைகளைக் கொண்டு சென்று அடகுக் கடையில் வைத்தபோது அதில் பாதி நகை கவரிங் நகைகள் என்று தெரிந்துள்ளது.

வியாபாரி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து இரண்டு கிராம் தங்க நகை பறிமுதல் செய்தனர். கொலையாளி இருசப்பன் மீது பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி