ஆப்நகரம்

புதுச்சேரியில் என்ன நடக்குது?; பாஜ மாநில தலைவர் விளக்கம்!

புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணிக்குள் 100 சதவீதம் குழப்பம் இல்லை என்றும், முதலமைச்சர் ரங்கசாமி குணமடைந்து வந்த பின்னர் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெறும் எனவும் பாஜக மாநில தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 11 May 2021, 2:30 pm
புதுச்சேரியில் நியமன எம்.எல்.ஏக்களாக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட 3 பாஜக நிர்வாகிகள் இன்று காலை பாஜக தலைமை அலுவலகம் வந்தனர். பின்னர் மாநில தலைவர் சாமிநாதனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
Samayam Tamil சாமிநாதன்
சாமிநாதன்


இதனை தொடர்ந்து மாநில தலைவர் சாமிநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே 100% குழப்பம் இல்லை. சிலர் குழப்பம் செய்கின்றனர். முதலமைச்சர் ரங்கசாமி குணமடைந்து வந்த பின்னர் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா நடைபெறும்.

ஓபிஎஸ்சை கடுப்பேத்தும் அதிமுக; இபிஎஸ் கை ஓங்குவதால் அதிருப்தி!

கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் 3 நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த முறை போல் இதுவும் மத்திய அரசின் முடிவு. மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு செயல்படுத்தும்.

5 ஆண்டுகள் சிறப்பான ஆட்சி நடைபெறும். தங்களது தொகுதிகளுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதால் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவிற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். எங்கள் கூட்டணி முழு பலத்துடன் உள்ளது. இவ்வறு பாஜக மாநில தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி