ஆப்நகரம்

கடைகளுக்கு 2 மணி வரை மட்டுமே அனுமதி; ஆளுநர் தகவல்!

கடைகளுக்கு 2 மணி வரை மட்டுமே அனுமதி உள்ளதாக ஆளுநர் கூறியுள்ளார்.

Samayam Tamil 21 Apr 2021, 4:53 pm
புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் பாவேந்தர் பாரதிதாசனின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. நினைவு தினத்தையொட்டி பாரதி பூங்கா அருகே உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
Samayam Tamil துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன்
துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன் பேட்டி அளிக்கிறார்.


பாலூட்டி வளர்த்த நாய்; உரிமையாளருக்கு பாலூற்ற வைத்த பரிதாபம்!

புதுச்சேரியில் ரெம்டெசிவிர் உள்ளிட்ட உயிர் காக்கும் மருந்துகள் பற்றாக்குறை இல்லை. அடுத்த 10 நாட்களுக்கு சிகிச்சைக்கு தேவையான மருந்து உள்ளது. முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து அவர்களுக்கு முக கவசத்தை போலீசார் வழங்கி வருகின்றனர்.

சுற்றுலா பயணிகள் வருகையை கட்டுப்படுத்தவும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இந்த வார இறுதியில் பரிசாத்திய முறையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

அடுத்த வார இறுதியில் பாதிப்பை பொறுத்து ஊரடங்கு அறிவிக்கப்படும். வரும் திங்கட்கிழமை முதல் அத்தியாவசிய கடைகளை தவிர்த்து மீதமுள்ள கடைகள் மதியம் 2 மணிக்கு மூட வேண்டும். பொதுமக்கள் நலன் கருதி இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் வெளியே வந்தால் எப்.ஐ.ஆர்; கொரோனா 20 மடங்கு அதிகம்!

ஜிப்மர் மருத்துவமனையில் ரெம்டெசிவர் மருந்து போதிய மருந்து போதிய அளவு உள்ளது. ஜிம்பர் மருத்துவமனைக்கு ரெம்டெசிவர் மருந்துகள் தேவைப்பட்டால் உதவி செய்ய தயார். இவ்வாறு துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.

அடுத்த செய்தி