ஆப்நகரம்

ஊரடங்கிலும் கட்டுக்கடங்காத கூட்டம்; விசேஷம் இருந்தா கூட தானே செய்யும்!

புதுச்சேரி எல்லை பகுதியில் ஊரடங்கு நேரத்திலும் கள்ளச்சாராய வியாபாரம் கொடிக்கட்டி பறக்கிறது. இதனால் இங்கு நாள்தோறும் ஏராளமானோர் வந்து போட்டிப்போட்டு சாராயம் வாங்கி செல்வதாலும், அங்கேயே ஒன்றுகூடி குடிப்பதாலும் கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Samayam Tamil 17 May 2021, 1:41 pm
கொரோனா நோய் பெருந்தொற்றின் இரண்டாவது அலை புதுச்சேரி மாநிலத்தை நிலைகுலைய வைத்திருக்கிறது. உருமாறிய கொரோனா இரண்டாம் அலை மக்களை திணறடித்து வருகிறது.
Samayam Tamil சாராயம் விற்பனை நடக்கிறது
சாராயம் விற்பனை நடக்கிறது


இந்த பெருந்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு இரண்டாயிரத்தைத் தாண்டியும், சில நாட்களில் குறைந்தும் வருகிறது. அதேபோல் கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை மட்டும் தினந்தோறும் 29-ஐ தாண்டி வருகிறது.

இதனால் புதுச்சேரி மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து மாநிலத்தில் மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மதுபான கடைகள் மூடப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு வாரம் ஆகியுள்ள நிலையில் ஆங்காங்கே கள்ளத்தனமாக சாராயம் விற்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது போலீசார் சோதனை செய்து அவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.

நம்பி தான் ஆகனும் ஆபீசர்; ‘போலீஸ் உங்கள் நண்பன்’

இந்நிலையில் புதுச்சேரி மாநில எல்லை பகுதியான மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட மணலிப்பட்டு கிராமத்தில் கள்ளத்தனமாக சாராயம் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

வயதானவர்கள் மற்றும் இளைஞர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் நாள்தோறும் பட்டப்பகலிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் ஒருவர் மீது ஒருவர் ஏறி, விழுந்து சாராயத்தை வாங்கி செல்கின்றனர். மேலும் பலர் அங்கேயே அமர்ந்து ருசித்து, ரசித்து குடிக்கின்றனர்.

மின் மயானம் எப்பவும் பிசி; கொரோனாவ கொல்லுங்க!

இதனால் கொரோனா நோய் பரவல் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அரசின் உத்தரவை மீறி கள்ளச்சாராய விற்பனை பட்டப்பகலில் நடைபெறுவதால் காவல் துறையினரும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வேதனை அளிக்கக்கூடிய ஒன்றாக உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே இனியாவது கள்ளத்தனமாக சாராயம் விற்பனை செய்யும் நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் வீடியோ தற்போது வைரலாகி வருவதால் புதுச்சேரி போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி