ஆப்நகரம்

புதுக்கோட்டை; ஸ்ரீ பொன்வாசி நாதர் சமேத சொர்ணாம்பிகை திருக்கோவில் சித்திரை திருவிழா!

ஸ்ரீ பொன்வாசி நாதர் சமேத சொர்ணாம்பிகை திருக்கோவிலில் சித்திரை தேரோட்டம்

Curated byDhivya Thangaraj | Samayam Tamil 2 May 2023, 7:58 pm

ஹைலைட்ஸ்:

  • ஸ்ரீ பொன்வாசி நாதர் சமேத சொர்ணாம்பிகை திருக்கோவில்

  • சித்திரை திருவிழா முடிவு

  • தீர்த்தவாரி நிகழ்ச்சி
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil ஸ்ரீ பொன்வாசி நாதர் சமேத சொர்ணாம்பிகை திருக்கோவில் சித்திரை திருவிழா
ஸ்ரீ பொன்வாசி நாதர் சமேத சொர்ணாம்பிகை திருக்கோவில் சித்திரை திருவிழா
ஸ்ரீ சொர்ணாம்பிகை பொன்வாசிநாதர் சமேததிருக்கோவில்
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ சொர்ணாம்பிகை பொன்வாசிநாதர் சமேததிருக்கோவில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற தலமாக இந்த கோவில் விளங்குகின்றது. இந்த கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு சிறப்பு வாய்ந்த விழாக்கள் கொண்டாடப்படுகின்றது. இதில் முக்கிய விழாவாக சித்திரை திருவிழா வெகு விமர்சையாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம்.
அம்பாள் திருக்கல்யாண வைபவம்
மேலும் அந்த வகையில் நடப்பாண்டும் சித்திரை திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்வுடன் கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி கொடியேற்றப்பட்டு விழா தொடங்கியது. இந்நிலையில் விழாவையொட்டி தினந்தோறும் சாமி வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் கடந்த 30ஆம் தேதி சுவாமி அம்பாள் திருக்கல்யாண வைபவம் விமர்சையாக நடைபெற்றது.

புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு: முன்னாள் அமைச்சர் விஜய் பாஸ்கரின் காளைக்கு காயம்... ஆபத்தான நிலையில் கால்நடை மருத்துவமனையில் அனுமதி!

தேரோட்ட நிகழ்வு
மேலும் விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் இன்று நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து காலை 10:30 மணி அளவில் ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத பொன்வாசிநாதர் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதனைத் தொடர்ந்து மாலை 5:30 மணி அளவில் தேர் வடம் பிடிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

தீர்த்தவாரி நிகழ்ச்சி
அதனை தொடர்ந்து இந்த விழாவில் இந்து சமய அறநிலைத்துறை அலுவலர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், மண்டகபடி உபயஸ்தர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேர் வடம் பிடித்து இழுத்தனர்.நகரின் முக்கிய வீதிகளில் சுற்றி வந்த திருத்தேர் மாலை 6:30 மணி கோவில் வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும் இரவு 7 மணி அளவில் கொடி இறக்கப்பட்ட விழா நிறைவடைந்துள்ளது.
எழுத்தாளர் பற்றி
Dhivya Thangaraj

அடுத்த செய்தி