ஆப்நகரம்

ஆதிரெத்தினேஸ்வரர் கோவில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்...!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் கோவில் வைகாசி விசாக திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Samayam Tamil 24 May 2023, 4:15 pm

ஹைலைட்ஸ்:

  • ஆதிரெத்தினேஸ்வரர் கோவில் வைகாசி விசாக திருவிழா
  • 14 சிவ ஸ்தலங்களில் இக்கோவில் 8வது ஸ்தலம்
  • மாணிக்கவாசகர், திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற ஸ்தலம்
  • வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil ஆதிரெத்தினேஸ்வரர் கோவில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம்
ஆதிரெத்தினேஸ்வரர் கோவில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் அருள்மிகு சினேகவள்ளி தாயார், ஆதிரத்தினேஸ்வரர் ஆலயம் உள்ளது.
8வது ஸ்தலம்

இந்த ஆலயம் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாதிக்கப்பட்ட ஆலயமாகும். பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட 14 சிவ ஸ்தலங்களில் இக்கோவில் 8வது ஸ்தலமாக உள்ளது. இக்கோவில் மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும்.
ராமநாதபுரத்தில் பரபரப்பு; தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
வைகாசி விசாக திருவிழா

இக்கோவிலில் வைகாசி விசாக திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக நேற்று இரவு கணபதி பூஜை, வாஸ்த்து சாந்தி , துஜபடம் ஆகிய பூஜைகள் நடைபெற்றது.

பெருந்தேரோட்டம்

விழாவின் சிறப்பு நிகழ்வாக வரும் ஜூன் 1 ஆம் தேதி சுவாமி அம்மன் இரண்டு தேர்களில் சுற்றி வரும் பெருந்தேரோட்டம் நடைபெற உள்ளது.

விழா ஏற்பாடு

விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான நிர்வாகிகள் மற்றும் இருபத்து இரண்டரை நாட்டார்கள், ஆடானை வளர்ச்சி குழு, ஆதி நன்பர்கள் ஆகியோர் செய்துள்ளனர்.

அடுத்த செய்தி